பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ தளபதியும், அதிபருமான பெர்வேஸ் முசாரப்பின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பல நாட்களாக துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெர்வேஸ் முசாரப்பின் உறுப்புகள், தற்போது செயலிழந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.