பெரு நாட்டின் மத்திய கடற்கரைப் பகுதியில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி ஒன்றை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். 


தென் அமெரிக்காவின் கடற்கரைக்கும் மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் தோன்றி மறைந்த நாகரீக சமூகத்தைச் சேர்ந்த  ஒருவருடையதாக  இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். லிமா பகுதியில் கண்டறியப்பட்ட இந்த மம்மியின் பாலினத்தின்  அடையாளம் காணப்படவில்லை என தொல்பொருள் ஆய்வாளர் பீட்டர் வான் டேலன் லூனா தெரிவித்தார்.   


பெரு நாட்டின் தலைநகரமும் லிமாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள கல்லறையில் இந்த மம்மி கண்டறியப்பட்டுள்ளது. மம்மியுடன்  இரும்புப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பீங்கான் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. உள்ளூர் இறுதி சடங்குகளுக்கு ஏற்ப உடல் கயிறால் கட்டப்பட்டு, முகத்தை மூடியவாறு இந்த உடல் வைக்கப்பட்டுள்ளது.     




 


பெரு நாடுகளில் வாழ்ந்த சின்சொரோ மக்கள்:  


எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், சடலப்பதனிடல் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாடுகளில் வாழ்ந்த சின்சொரோ மக்களே. சின்சொரோ மம்மிகள், எகிப்திய மம்மிகளை விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை.


இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எகிப்திய மம்மிகளில் மிகவும் பழைய மம்மியின் ஆண்டு கிமு 3000 ஆகும். ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சின்சொரோ மம்மிகளில் மிகவும் பழைய மம்மியின் வருடம் கிமு 5050 ஆகும். சின்சொரோ மம்மிகள் ஏறத்தாழ 2000 வருடங்கள் பழமையானது. மற்றொரு பழமையான மம்மி நடு சகாராவில் உள்ள உன் முகுக்கியாக் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் மம்மியாகும். இம்மம்மியின் அகவை சுமார் 5500 வருடங்களாகும்.




 


இயற்கையாக பதப்படுத்தப்பட்ட சின்சிரோ மம்மிகளில் மிகவும் பழையது அட்டகாமா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.மு 7020ஐச் சேர்ந்த மம்மியாகும்.  


முன்னதாக, 2400 ஆண்டுகளுக்கு முன் நல்லடக்கம் செய்யப்பட்டு இயற்கையாலேயே பாதுகாக்கப்பட்ட மம்மியின் வயிற்றில் கடைசியாக அந்த மனிதர் உட்கொண்ட உணவுப் பொருட்கள் செரிமானம் ஆகாமல் அப்படியே இருந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். பார்லி, ஆளி விதை, பெர்சிகேரியா விதைகள், மீன் செரிமானம் ஆகாமல் இன்னும் அந்த மம்மியின் வயிற்றில் அப்படியே உள்ளது ஆச்சர்யமான செய்தியாக வெளியாகியது.   


 


மேலும், வாசிக்க: Annamalai on Tamil Cinema: மாநாடு சர்ச்சை.. தேவையற்ற விமர்சனம் வேண்டாம் - பாஜக அண்ணாமலையின் லேட்டஸ்ட் அறிக்கை! 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண