ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வகையை விட ஒமிக்ரான் பாதிப்பின் தீவிரத்தன்மை குறைவாக இருப்பதாக இங்கிலாந்து அரசின் சுகாதார பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழல் 50 முதல் 70 சதவிகிதம் வரை குறைந்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போது, உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் நோய்த்தொற்று பாதிப்புகளை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக இங்கிலாந்து அரசின் சுகாதாரத்துறை முகமை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து, இங்கிலாந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இந்த ஆய்வை நடத்தியது.
ஆய்வின் முடிவில்,
டெல்டா வகையை விட தீவிர நோயிலிருந்து தப்பிக்கும் விகிதம் 31% முதல் 45% குறைவாக உள்ளது;
மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழல் 50 முதல் 70 சதவிகிதம் வரை குறைந்து காணப்படுகிறது.
எவ்வாறாயினும், மற்ற கொரோனா வகையை விட ஒமிக்ரான் பரவல் விகிதம் அதிகரித்து காணப்படுவதால், சுகாதார நெருக்கடி காணப்படும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று சவால்களை சமாளிக்க தயார் நிலையில் இருக்கும் வகையில் இந்தியாவின் சுகாதார கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, டென்மார்க், தென் ஆப்ரிக்கா, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளும் இத்தகைய போக்கை காட்டியிருந்தது. எனவே, இந்த புதிய ஆய்வு அதிக நம்பிக்கையை அளிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பூஸ்டர் தடுப்பூசி:
ஒமிக்ரான் நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க, இரண்டு கட்ட டோஸ்களையும் தாண்டி மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்