ஸ்லோவாக்கியாவில் அறுவை சிகிச்சையின் போது  மருத்துவர் ஒருவர் தவறான கண்ணை அகற்றியதால் நோயாளிக்கு முழு பார்வையும் பறிபோனது.


கவனக்குறைவு!


மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவு மிகப்பெரிய அபாயாத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சான்றாக எத்தனையோ சம்பவங்களை பார்த்திருக்கிறோம்.  மருத்துவமனைக்கு காய்ச்சல் என வந்தவருக்கு , வயிற்று அறுவை சிகிச்சையை மருத்துவர் செய்வது போல  திரைப்படத்தில் சில நகைச்சுவை காட்சிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் இப்படியான சம்பவங்கள் இந்த நவீன காலக்கட்டத்திலும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த சம்பவங்கள் உண்மையில் வேதனைக்குறியது.




கண் மாற்று அறுவை சிகிச்சை :


ஸ்லோவாக்கியாவில்  புகழ்பெற்ற மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவர் ஒருவரை , ஒரு கண்ணில் மட்டும் பார்வை குறைபாடு ஏற்பட்ட நபர் அனுகியிருக்கிறார். கண்ணை பரிசோதித்த மருத்துவர் அந்த கண்ணை நீக்க வேண்டும் இல்லையென்றால் ஆபத்து என கூற , அந்த நபரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். பொதுவாக மேலை நாடுகளில் இது போன்ற அறுவை சிகிச்சை செய்யும் பொழுது நோயாளிகள் மருத்துவர்கள் மேற்பார்வையில் இருக்க வேண்டியது அவசியம் . இதனால் அடிக்கடி மருத்துவர்கள் நோயாளிகளை தொடர்புக்கொண்டு பேசுவார்கள். ஆனால் சமபந்தப்பட்ட நோயாளியிடன் மருத்துவர் தொடர்பில் இல்லை என தெரிகிறது. இதனால் அறுவை சிகிச்சை நாளன்று மருத்துவர் பிரச்சனைக்குறிய கண்ணை அறுவை சிகிச்சை செய்யாமல் , ஆரோக்கியமான  கண்ணை நீக்கிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு முற்றிலுமாக பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.




மன அழுத்தம்:


அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் நோயாளியுடன் தொடர்பில் இல்லை என்பதை பிராட்டிஸ்லாவா பல்கலைக்கழக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியதாக ஸ்லோவாக்கியாவின் TASR செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபரும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால் அவர்களுக்கு கவுன்ஸிலிங் தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதார மேற்பார்வை ஆணையம்  இந்த சம்பவம் எப்படி ஏற்பட்டது, தவறு இழைக்க காரணம் என்பது குறித்து தற்போது தனது விசாரணையை துவங்கியுள்ளது. இதே போல கால் கட்டை விரல் அகற்றப்பட்ட சம்பவம் , கருப்பை நீக்கப்பட்ட சம்பவம், வைற்றில் கை உறையை வைத்து தைத்த சம்பவம் என எத்தனையோ நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம்.


கொரோனா சூழலில் ஸ்லோவாக்கியா மருத்துவர்கள் மிகுந்த மன அழுத்ததை சந்தித்தனர்.  3,000 மருத்துவர்கள் பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை கேட்டு போராட்டங்களை நடத்தினர். அரசு செவி சாய்க்கவில்லை என்பதால் ஸ்லோவாக்கியாவில் இருந்து பல மருத்துவர்கள்   செக் குடியரசு மற்றும் ஆஸ்திரியாவிற்கு இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.