18 ஆண்டுகளுக்கு பிறகு, கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணையும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. அடுத்த 50 ஆண்டுகளில், ஐந்து கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணைவது ஒரு முறைதான் நிகழ உள்ளது.


இதுகுறித்து வானியல் நிபுணர் கூறுகையில், "ஒரே நேர்கோட்டில் மூன்று கிரகங்கள் இணைவதை (Conjunction)இணைப்பு என்கிறோம். இம்மாதிரியான நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது. இருப்பினும், ஐந்து கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணைவது அரிய நிகழ்வு" என்றார்.


 






சூரியனிலிருந்து இந்த கிரகங்கள் எந்த வரிசையில் அமைந்திருக்கிறதோ அதே வரிசையில்தான் இவை ஒரே நேர் கோட்டில் இணையவிருக்கிறது. எனவே இது ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வு எனக் கூறப்படுகிறது.


காலை வானில் இந்த கிரகங்கள் ஏற்கனவே தெரிய தொடங்கிவிட்டது. ஆனால், அவை பிரிய தொடங்கிவிட்டது. அவற்றில், இரண்டு கிரகங்கள் செப்டம்பர் மாதத்திலிருந்து காலை நேரங்களில் தெரியப்போவதில்லை என நாசா தெரிவித்துள்ளது.


கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணைவது எப்போது?


கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணைவது ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஜூன் மாதம் முழுவதும், கிழக்கு அடிவானத்திற்கு மேலே கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் இணைவதை பார்க்கலாம். தொலைநோக்கி இல்லாத பட்சத்தில், இந்த அரிய நிகழ்வை பார்ப்பதற்கான சிறந்த நேரம் காலை 3:39 லிருந்து 4:43 வரை. ஆனால் இதுவெல்லாம் அமெரிக்காவுக்குத்தான்.இந்தியாவில் இந்த அரிய நிகழ்வைக் காணுவது குறித்து நாசா எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.


நியூயார்க்கில் இருப்பவர்கள், இரவு 11:21 மணிக்கு சனி கிரகத்தை காணலாம். காலை 1:05 மணிக்கு வியாழன் கிரகத்தையும் 1:44 மணிக்கு செவ்வாய் கிரகத்தையும் 3:33 மணிக்கு வெள்ளி கிரகத்தையும் 4:11 மணிக்கு புதன் கிரகத்தையும் காணலாம். தொலைநோக்கி இல்லாமலேயே இந்த கிரகங்களை காலை வானில் காணலாம். மேகங்கள் சூழாத பட்சத்தில், சூரிய உதயத்திற்கு முன்பு கிரகங்களை காணலாம்.


சனி, வியாழன், செவ்வாய், வெள்ளி, புதன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இணைகிறது. பார்ப்பதற்கு மிக கடினமான கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. ஆனால், அது உயரமாக செல்லும் பட்சத்தில் பிரகாசமாக அது தெரிய தொடங்கும். பின்னர், அது பார்ப்பதற்கு எளிதாகவிடும்.