உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடரும் நிலையில், பாரிஸில் உள்ள கிரேவின் அருங்காட்சியகத்தில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மெழுகு சிலை அகற்றப்பட்டுள்ளது.


உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கி நிலையில், நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே இருக்கிறது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். குறிப்பாக உக்ரைனின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலையங்கள் ஆகியவற்றைக்குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு பெரும் சேதத்தை மக்கள் சந்தித்து வருகின்றனர்.





8-வது நாளாக போர் தீவிரமாகும் நிலையில், தலைநகரை இன்னும் 2 இரண்டு நாள்களில் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை ரஷ்ய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் இச்செயலைக்கண்டிக்கும் விதமாக பல நாடுகளில் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இருந்தப்போதும் ரஷ்யா அதன் நிலைப்பாட்டிலிருந்து தவறாமல் போர்தெடுத்துவருகின்றனர். இதனால் உலக நாடுகளின் பார்வையில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் வில்லனாக மாறியுள்ள நிலையில் 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர் என புடிர் அழைக்கப்படுகிறார். இதோடு மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் தினமும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.


இதன் ஒரு பகுதியாக பாரீஸில் உள்ள புகழ்பெற்ற கிரேவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ரஷ்யா அதிபர் விளாடிமின் புடினின் மெழுகு சிலை அகற்றப்பட்டுள்ளது. இதுக்குறித்து அருங்காட்சியகத்தின் இயக்குனர் தெரிவிக்கையில், இந்த அருங்காட்சியகத்தில் உலக தலைவர்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் தற்போது புடினின் மெழுகு சிலையை அகற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். 






இதோடு இந்த அருங்காட்சியகத்தில், ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளை அருங்காட்சியகத்தில் நாங்கள் வைத்ததில்லை எனவும் தற்போது ரஷ்ய அதிபரும் ஹிட்லர் போன்று உள்ளதால் அவரின் சிலையை வைக்கவிருப்பமில்லாமல் அகற்றியதாக கூறியுள்ளனர். மேலும் அருங்காட்சியக வரலாற்றில் முதன் முறையாக தற்போது நடைபெற்றுவரும் வரலாற்று நிகழ்வுகள் காரணமாக ஒரு சிலையை திரும்பப்பெறுகிறோம் எனவும் கூறினார்.


ரஷ்யாவின் இத்தகைய தாக்குதலுக்கு உக்ரைன் மட்டுமில்லாது பல உலகநாடுகளும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதோடு ரஷ்யாவிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஷ்ய சர்வாதிகாரி மற்றொரு நாட்டைத் தாக்குவதன் அர்த்தம் முழு உலகிற்கும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் உலக நாட்டுத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.