பாகிஸ்தான் நாட்டில் பாலுக்கு வரி விதித்துள்ளது தொடர்ந்து, பல வளர்ந்த நாடுகளை விட, பாகிஸ்தானில் விலை அதிகமாக உள்ளது.
பாலுக்கு வரி:
புளூம்பெர்க் செய்தி நிறுவனம் அளித்துள்ள தரவுகளின்படி, கராச்சியில், (UHT) பால் இப்போது லிட்டருக்கு 370 பாகிஸ்தானிய ரூபாய் விலையாக உள்ளது ( இது டாலர் மதிப்பில் $1.33 ). ஆம்ஸ்டர்டாமில் $1.29, பாரிசில் $1.23, மற்றும் மெல்போர்னில் $1.08 ஆக உள்ளது என தகவல் தெரிவிக்கின்றன. கடந்த வாரம், பாகிஸ்தான் நாட்டின் பட்ஜெட்டில் வரி விதிப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக பேக்கேஜ் செய்யப்பட்ட பாலுக்கு 18% வரி விதிக்கப்பட்டது. முன்னதாக, இது வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
பாதிப்புக்குள்ளாகும் ஏழை மக்கள்:
பால் விலையானது அதிகரித்து வருவது, பணவீக்கத்தை அதிகரிக்கும் எனவும், மக்களின் செலவின சக்தியை, அதாவது செலவழிக்கும் தன்மையை குறைக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் குழந்தைகளைன் ஆரோக்கியம் பாதிக்கப்படும் எனவும் கருத்துகள் எழுகின்றன. 5 வயதிற்குட்பட்ட பாகிஸ்தானியக் குழந்தைகளில் சுமார் 60% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் 40% வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர்.
காரணம் என்ன?
சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், பாகிஸ்தான் அரசாங்கமானது கடந்த வார வரவு செலவுத் திட்டத்தில் வரிகளை உயர்த்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த விலை உயர்வானது , பல வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் பாலின் விலையை விட பாகிஸ்தானில் , அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், வறுமை கீழ் உள்ள மக்கள் மற்றும் நடுத்தர மக்கள், மிகுந்த பாதிப்புக்குள்ளாவார்கள் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.