Watch Video: தலையிலே சிசிடிவி கேமரா! மகளை கண்காணிக்க தந்தை போட்ட பிளான் - நீங்களே பாருங்க
பாகிஸ்தானில் மகள் ஒருவரின் தலையில் சி.சி.டி.வி. கேமரா வைத்து தந்தை கண்காணித்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தைகளை வளரும்போதும் வளர்ந்த பிறகும் பெற்றோர்கள் எப்போதும் தங்களது பிள்ளைகள் மீது கவலைகளும், அக்கறைகளும் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, பெண் பிள்ளைகளை அவர்களின் பாதுகாப்பிற்காகவும், எதிர்காலத்திற்காகவும் மிகவும் கவனத்துடன் வளர்க்க வேண்டும் என்றே கருதுவார்கள்.
தலையில் சி.சி.டி.
பொதுவாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வளரும்போதும், வளர்ந்த பிறகும் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பது வழக்கம். ஆனால், பாகிஸ்தானில் தந்தை ஒருவர் தனது மகளின் பாதுகாப்பிற்காக செய்த காரியம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கராச்சி நகரில் வசித்து வரும் அவர் தனது மகளை கண்காணிப்பதற்காக தனது மகளின் தலையிலே சி.சி.டி.வி. கேமராவை பொருத்தியுள்ளார். அந்த பெண்ணும் வெளியில் எங்கு சென்றாலும் சி.சி.டி.வி.யுடனே நடமாடுகிறார்.
Just In




காரணம் என்ன?
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தலையில் சி.சி.டி.வி.யுடன் உலா வரும் இந்த பெண்ணிடம் இதுதொடர்பாக கேட்டதற்கு தனது தந்தையின் இந்த செயல் தனது முழு ஒப்புதலுடன் நடைபெற்றதாக அந்த பெண் கூறியுள்ளார். பாகிஸ்தானின் முக்கியமான மற்றும் பரபரப்பான நகரமான கராச்சியில் சிறுமிகளுக்கு எதிராக அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடப்பதாகவும், ஆனால் அதற்கு போதுமான ஆதாரங்களும், நீதியும் கிடைக்கவில்லை. எனக்கு ஏதாவது நிகழ்ந்தால் குறைந்தபட்சம் ஆதாரமாவது கிடைக்கும் என்று அந்த பெண் கூறியுள்ளார். மேலும், இந்த சிசிடிவி காரணமாக வெளியில் செல்லும்போது அந்த பெண்ணை அவரது தந்தை கண்காணிக்க முடியும் என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.
தந்தையின் இந்த முயற்சிக்கு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும், அந்த பெண்ணின் தனியுரிமை இதனால் பாதிக்கப்படும் என்று பலரும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.