பாகிஸ்தான் நாட்டில் தொலைக்காட்சி சேனல்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்தச் சுற்றறிக்கை தற்போது மிகவும் சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது. அப்படி அந்த அறிக்கையில் என்ன தான் உள்ளது? அது கிளப்பிய சர்ச்சை என்ன?


பாகிஸ்தான் நாட்டின் தொலைக்காட்சி ஒழுங்கு முறை ஆணையத்திற்கு சில நாட்களாக அங்கு உள்ள சேனல்களில் திரையிடப்பட்டு வரும் சீரியல்கள் குறித்து புகார் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அந்த சீரியல்களில் காதல் தொடர்பான விஷயங்கள் மற்றும் கணவன் மனைவிக்கு இடையேயான காதல் காட்சிகள் மற்றும் கட்டுபிடித்தல் போன்ற காட்சிகள் தொடர்பாக புகார் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பாகிஸ்தான் நாட்டின் கலாச்சாரத்திற்கும் இஸ்லாமிய மத நல்லிக்கணங்களுக்கும் எதிரான ஒன்று புகார் வந்துள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. 


இதுதொடர்பாக பலரும் இணையதளம் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இனிமேல் பாகிஸ்தானில் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நாடகங்களில் இதுபோன்ற காட்சிகளை திரையிடவும் காட்சிப்படுத்தவும் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பாகிஸ்தான் அரசின் உரிமம் பெற்றுள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 


 






பாகிஸ்தான் ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த அறிவிப்பை பலரும் எதிர்த்து வருகின்றனர். இது தொடர்பாக பெண் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில்,”பாகிஸ்தான் அரசு இப்போது நல்ல முடிவை எடுத்துள்ளது. அன்பு, காதல், கணவன்-மனைவி உறவு ஆகியவை அனைத்தும் பாகிஸ்தான் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஏனென்றால் நாம் பெண் அடிமை தனம், பெண்ணிற்கு எதிரான வன்முறை ஆகியவற்றை காலம் காலமாக நிகழ்த்தி வருகிறோம். அதனால் இவை அனைத்தும் நம்முடைய கலாச்சாரத்திற்கு எதிரானவை” என்று இந்த அறிக்கையை சாடும் வகையில் பதிவிட்டுள்ளார். 


 






இவரை போல் அங்கு இருக்கும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் இந்த அறிவிப்பு தொடர்பாக தங்களுடைய கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த உத்தரவை பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: சின்ன டிஸ்டர்பன்ஸ்தான்.. நிலநடுக்கத்தையே தூசாக டீல் செய்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா.