ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது, நேற்று பயங்கரவாதிகள் நடத்தினர். இத்தகைய பயங்கரவாத தாக்குதலில் குறைந்தபட்சம் 26 பேர் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் மீது இத்தகைய கொடூர தாக்குதல்களானது நாட்டையை கவலையடையச் செய்துள்ளது. மேலும், இத்தாக்குதல்களுக்கு அமெரிக்கா , ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட அயல்நாட்டு தலைவர்களும் கண்டித்துள்ளனர். இத்தாக்குதல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய TRF (தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்) அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அமைச்சர்:

இந்நிலையில் , இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்திருப்பதாவது, ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில், பாகிஸ்தானுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இந்திய மாநிலங்களான நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, சத்தீஸ்கர், மணிப்பூர் மற்றும் தெற்கு பகுதி உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் புரட்சிகள் இருக்கின்றன. இவையெல்லாம் வெளிநாட்டு தலையீட்டின் செயல்கள் அல்ல, உள்ளூர் எழுச்சிகளால்தான். இந்த வன்முறையானது இந்தியாவில் வளர்ந்தது என்றும், இந்தியாவிற்கு எதிரான கிளர்ச்சியின் ஒரு பகுதி என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்துத்துவ சக்திகள் சிறுபான்மையினர், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், முஸ்லிம்கள் ஆகியோரை அடக்குகின்றன என்றும், பாகிஸ்தானின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும், பலுசிஸ்தானில் அமைதி இல்லாத சூழலை இந்தியா ஆதரிக்கிறது. பாகிஸ்தானில் ஸ்திரமின்மைக்குப் பின்னால் இந்தியாவின் பங்கு இருப்பதற்கான ஆதாரங்களை நாங்கள் ஒரு முறை அல்ல, மீண்டும் மீண்டும் பலமுறை முன்வைத்துள்ளோம்.

"எந்த சூழ்நிலையிலும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்க்கிறது என்றும் இந்தியா தனது சொந்த குடிமக்களை நடத்துவது ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கு வழிவகுக்கும் என்றும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இராணுவம் அல்லது காவல்துறை அட்டூழியங்களைச் செய்தால் பாகிஸ்தானை குற்றம் சாட்டுகிறார்கள் என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் எம்.பி

பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஷெர்ரி ரெஹ்மான்  எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பஹல்காமில் நடைபெற்ற  பயங்கரவாதத் தாக்குதலை கண்டிக்கிறேன். இந்தத் தாக்குதல்களுக்கு உடனடியாக பாகிஸ்தானை இந்தியா குற்றம் சொல்வது இயல்பான எதிர்வினைதான். தற்போது, இந்தத் தாக்குதலுக்கு எந்தவித விசாரணையும் இல்லாமல் பாகிஸ்தானை அழிக்கவேண்டும் என இந்தியாவின் வலதுசாரிகள் அழைப்பு விடுப்பார்கள். இந்தியா தனது தோல்விகளைத் தடுக்கத் தவறிவிட்டது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன, அவை கேலி செய்யப்படும் நிலையும் இருக்கிறது.  என்று ஷெர்ரி ரெஹ்மான் கூறியுள்ளார்.