கிறிஸ்துமஸ் வார இறுதியில் மேற்கு நியூயார்க்கை முடக்கிய வெடிகுண்டு பனிப்புயல் குறைந்தது இரண்டு டஜன் மக்களைக் கொன்றது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். Buffalo நகரத்தை சுற்றியுள்ள பனியை அகற்ற அதிகாரிகள் போராடி வருகின்றனர். பல தசாப்தங்களாக இது போன்ற கடும் பனிப்புயலை பார்த்தது இல்லை என கூறுகின்றனர்.


பனிப்புயல் உருவானது முதல் buffalo நகரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 அடிக்கு பனி சூழ்ந்துள்ளது, தொடர்ந்து பனிப்பொழிவதால் நிலமை மோசமடைந்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.  ஆளுநர் இதனை வரலாறு காணாத இயற்கை பேரழிவு என குறிப்பிட்டார்.  இந்த பனிப்புயல் காரணமாக இறப்புகளின் எண்ணிக்கை 13-இல் இருந்து buffalo மற்றும் எரி கவுண்டியின் மற்ற பகுதிகளில் 27-ஆக உயர்ந்தது. பெரும்பாலானவர்கள் கார்களில் சிக்கியும், இதய அழுத்தம் ஏற்பட்டும், பனியை தாங்க முடியாமலும் இறந்ததாக கூறப்படுகிறது.  நாடு முழுவதும் வானிலை தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 60 உயிர்கள் பலியாகியுள்ளன என கூறப்படுகிறது. இந்த புயல் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் பல  நாட்கள் நீடித்தது.      


இந்த புயல் கரணமாக குறைந்தது 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட்து, இதனால் ஏராளமான பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். Buffalo நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. விமான நிலையங்களில் சுமார் 1.27 மீட்டர் வரை பனியால் மூடப்பாட்டது.


சாலைகள் முழுவதும் கார், பேருந்து, அவசர ஊர்தி என வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பனியை அகற்றும் பணிகள் தாமதமாகி வருகிறது. மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் கூட ஏரளாமான மக்கள் சாலையிலிருந்து மீட்க்கப்பட்டனர்.


அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் ‘பாம்’ புயலால்(Bomb Cyclone) பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கடுமையான குளிர் வாட்டி வருகிறது. இந்த ‘பாம்’ புயலுக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்த பாம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லாமல் கார்கள் மற்றும் வீடுகளில் மக்கள் சிக்கியுள்ளனர், அவர்களை மீட்கும் பணியில் தேசிய காவலர் மற்றும் உள்ளூர் அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.