ஓலா அறிவிப்பு:


ஓலா நிறுவனர்  பவிஷ் அகர்வால், ட்விட்டரில் அவரது பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஓலா மின்சார பைக்கில் ஒரே சார்ஜில் 200 கி.மீ-க்கு மேல் செல்லும் முதல் 10 வாடிக்கையாளர்களுக்கு, புதிய மாடலான Gerua S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக தர உள்ளதாக தெரிவித்துள்ளார்.






 


ஓலா பைக்


ஓலா பைக்கில் 2 மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதில் S1 மாடல்  120 கி,மீ வரை செல்லும் எனவும், S1 Pro மாடல் 180 கி.மீ வரை செல்லும் எனவும் ஓலா நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டது.


இலக்கை அடைந்த நபர்


இந்நிலையில் கார்த்திக் எனும் நபர், அவரது ஓலா S1 Pro மாடலில், 3 சதவீதம் இருக்கும் நிலையில் 202 கி.மீ-க்கு மேல் சென்று அசத்தியுள்ளார். இது ஓலா அறிவித்த தூரத்தை விட அதிகமாகும். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.


பரிசு அறிவித்த ஓலா


இந்நிலையில் கார்த்திக் என்ற நபரின் பதிவை ஓலாவின் நிறுவனர் பவிஷ் அகர்வால் பகிர்ந்து, வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கார்த்திக் உங்கள் திறமையை கண்டு மகிழ்ச்சியடைகிறோம். உங்களுக்கு இலவசமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை இரண்டு நபர்களுக்கு தர உள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்தமாக 10 நபர்களுக்கு தரவுள்ளதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் இச்சாதனை முறியடுத்துள்ளதாகவும் ,அதை உறுதி செய்துவிட்டு பரிசு கொடுக்க உள்ளதாகவும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.






சர்ச்சையிலும் பரிசு:


பல்வேறு இடங்களில் ஓலா பைக் சரியாக இயங்குவதில்லை என்றும், சில பைக்குகள் தீப்பற்றி எரிவதாககவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பலர் ஓலா எலக்ட்ரிக் பைக்குகள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் புது மாடல் எலக்ட்ரிக் பைக்கை ஓலா நிறுவனம் பரிசாக அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.