ஜெர்மனியைச்சேர்ந்த பெண் ஒருவர் லாட்டரியில் 290 கோடி ரூபாய் வென்றபொழுதும், தன்னுடைய ஞாபக மறதியில் லாட்டரி சீட்டினை பர்ஸில் 6 வாரங்களாக  வைத்து சுற்றித்திரிந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஞாபக மறதி என்பது அனைவருக்கும் வரக்கூடிய பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக அல்சைமர் என்று  கூறப்படும் இந்நோய் பெண்களை அதிகளவில் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றனர். சில நேரங்களில் என்ன செய்கிறோம்? நமக்கு ஆனது என்பதையே மறந்துவிடும் நிலையில் தான் இவர்கள் சுற்றித் திரிவார்கள் என்று கூறுவார்கள். அப்படித்தான் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நிகழ்ந்துள்ளது. ஆனால் இது சற்று வித்தியாசமாக சம்பவமும் கூட.


ஜெர்மனியைச் சேர்ந்த 45 வயதான லோயர் பிராங்கோனியா என்ற பெண், கடந்த ஜூன் 9 ஆம் தேதி லாட்டரி சீட்டு ஒன்றினை வாங்கியுள்ளார். இந்த லாட்டரியை வாங்கியவுடனே இவர் அதனை தனது பர்சிஸ் வைத்துள்ளார். அதிர்ஷ்டம் அந்தப்பெண்ணின் கதவினை தட்டியதுபோல் அந்த லாட்டரி  அடித்துள்ளது. ஆனால் தான் அந்த லாட்டரி சீட்டினை பர்சிஸ் வைத்து  6 வாரங்கள் சுற்றித் திரிந்துள்ளார்.  ஒரு மாதத்திற்கு பிறகு மற்றொரு லாட்டரி டிக்கெட்டினை வாங்கும்பொழுதுதான் முந்தைய லாட்டரியை மறந்தது ஞாபகம் வந்துள்ளது. மேலும் ஞாபக மறதியால் பர்சிஸ்தான் வைத்தோம் என்பதை மறந்து தேடி திரிந்த நிலையில் தான் திடீரென அவருக்கு நினைவுக்கு வந்த நிலையில் இதுகுறித்து லாட்டரி சீட்டு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.


மேலும்   பல வாரங்களாக என்னுடைய பர்சிஸ் ஏறக்குறைய 39 மில்லியனை கவனக்குறைவாக எடுத்துச்சென்றிருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது மயக்கம்தான் வருகிறது என்று அப்பெண் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஒரு நிமிடத்தில் கோடீஸ்வரர் ஆனாலும் ஞாபக மறதியின் காரணமாக நேர்ந்த  இச்சம்பவம் ஜெர்மனியில் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.



இதேபோன்று தான் கலிபோர்னியாவியைச்சேர்ந்த ஒரு பெண் 6 மாதங்களுக்கு முன்பாக 26 மில்லியன் மதிப்புடைய அதாவது 190 கோடி ரூபாய் லாட்டரி சீட்டினை வாங்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக லாட்டரி அடித்தபோதும், அவரால் பணத்தினை எடுக்க முடியவில்லை. இதற்கு இவருடைய ஞாபக மறதிதான் காரணம் என்று கூறப்படுகிறது. இவர் லாட்டரி டிக்கெட்டினை வாங்கிவிட்டு அந்த எண்ணினை ஒரு பேப்பரில் குறித்து வைத்துள்ளதோடு, சீட்டினை தன்னுடைய பேன்ட் பாக்கெட்டில் வைத்து விட்டார். ஞாபக இல்லாமல் கவனக்குறைவாக அதனை சலவைக்கு போட்டு விட்டார். இதனால் அவரால்  லாட்டரியில் வென்றப் பணத்தினை எடுக்க முடியில்லை. நிறுவன அலுவலர்களிடம் இதுகுறித்து தெரிவித்தும் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை.


ஞாபக மறதி மற்றும் கவனக்குறைவால் அவர் லாட்டரியில் அடித்த 190 கோடி ரூபாய் பணத்தினை பெற முடியவில்லை. இப்படியும் நடக்குதுல்ல..!