இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக உக்ரைனில் ரஷ்ய மக்களை குடியேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புதன்கிழமை அன்று உத்தரவிட்டுள்ளார்.


 






உக்ரைன் நிலப்பரப்பை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்தை ஆதரித்து பேசிய அவர், ரஷ்யாவை பாதுகாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் தான் பொய் சொல்லவில்லை என்றும் மேற்குலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.


கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததை தொடர்ந்து, இப்போர் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, அணு ஆயுத பயன்பாடு குறித்து புதின் வெளிப்படையாக பேசியுள்ள நிலையில், ஹங்கேரி அளவில் உக்ரேனிலிருந்து ஒரு பகுதியை இணைக்கும் திட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்தார். மேலும், 300,000 ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


ரஷ்யா மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ள புதின், "நமது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தப்பட்டால், ரஷ்யாவையும் நம் மக்களையும் பாதுகாக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என்பதில் சந்தேகமில்லை. நான் பொய் சொல்லவில்லை" என்றார்.


எந்த வித ஆதாரங்களை வெளியிடாமல் ரஷ்யாவை அழிக்க மேற்குலக நாடுகள் திட்டமிட்டு வருவதாக குற்றம் சாட்டிய புதின், "ஆக்கிரோஷமான ரஷ்ய-விரோதக் கொள்கையில், மேற்குலக நாடுகள் அனைத்து எல்லையையும் மீறிவிட்டன. இது ஒரு முட்டாள்தனம் அல்ல. அணுவாயுதங்களை வைத்து நம்மை அச்சுறுத்த முயல்பவர்கள், அந்த ஆயுதங்கள் அவர்களை நோக்கி திரும்பிச் செல்லக்கூடும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.


வடகிழக்கு உக்ரைனில் ரஷியா பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், உக்ரைன் போரின் எதிர்காலம், புதின் எதிர்காலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இச்சூழலிலும், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் புதின் தனது நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள், ரஷ்யா ஆகியவைக்கு இடையேயான நேரடி மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. 


இது, மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கலாம். உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் தங்களின் ஆதரவை தெரிவிக்கும். ஆனால், தற்போது வரை அதற்கான சமிக்ஞையை அந்நாடுகள் தெரிவிக்கவில்லை.


உக்ரைன் போர் காரணமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், போரின் விளைவாக ஏற்பட்டுள்ள பணவீக்கம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு, மேற்கு நாடுகளுடன் மிக மோசமான மோதலைத் இப்போர் தூண்டியுள்ளது. இதில், அணு ஆயுதப் போராக மாறிவிடுமோ என்று பலர் அஞ்சுகிறார்கள்.