குவாண்டம் இயற்பியலில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதற்காக ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அறிவித்துள்ளது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு:
ஒவ்வொறு ஆண்டும் பல்வேறு துறைகளில் தங்களது சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நோபல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசானது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை ஜான் கிளார்க், மைக்கேல் H. டெவோரெட், ஜான் எம். மார்ட்டினிஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்காந்தச் சுற்றில், மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டன்னலிங் ஆகியவை குறித்த ஆய்வின் கண்டுபிடிப்பாக மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது
நோபல் பரிசுத் தொகை எவ்வளவு?
2025 ஆம் ஆண்டுக்கான பரிசுத் தொகை முழு நோபல் பரிசுக்கும் IL மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (SEK) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடிஷ் குரோனர் (SEK) என்பது நோபல் பரிசுகள் வழங்கப்படும் ஸ்வீடனின் நாணயமாகும். 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் என்பது இந்திய ரூபாயில் தோராயமாக ரூ.10.38 கோடி ஆகும்.
பரிசுத் தொகை எங்கிருந்து வருகிறது?
முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானம் "முந்தைய ஆண்டில் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மையை வழங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வடிவில் விநியோகிக்கப்பட வேண்டும்". பல ஆண்டுகளாக ஸ்வீடிஷ் குரோனரில் (SEK) பரிசுத் தொகை, ஸ்வீடிஷ் குரோனரில் (SEK) டிசம்பர் 2023க்கான பண மதிப்பு மற்றும் 1901 இல் அசல் தொகையுடன் ஒப்பிடும்போது % இல் உள்ள மதிப்பு, அதாவது டிசம்பர் 2023 இல் அந்தத் தொகைக்கு சமமான மதிப்பு, பணவீக்கத்திற்கு (SEK இல்) சரிசெய்யப்பட்டது. நோபல் பரிசுகள் முதன்முதலில் வழங்கப்பட்ட 1901 இல் அசல் தொகையுடன் தற்போதைய மதிப்பின் சதவீத ஒப்பீடு.