ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், நடப்பாண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2021ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கூட்டாக இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட், அமெரிக்காவின் டேவிட் மெக்மில்லன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். "For the development of asymmetric organocatalysis" என்ற துறையில் ஆராய்ச்சி செய்ததற்காக இவர்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 














முன்னதாக, அமெரிக்காவின் ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசில்மன், இத்தாலியின் ஜியார்ஜியோ பாரிசி ஆகிய மூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 


மேலும் செய்திகளை காண,


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண