பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உலகளவில் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தை பருவத்தில் இருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் உலகளவில் இந்த குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு அவலமாக இருக்கிறது. இந்தச் சூழலில் அமெரிக்காவில் ஒரு இளைஞர் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சிறை தண்டையிலிருந்து தப்பியுள்ளார். அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படாததற்கு காரணம் என்ன?
அமெரிக்காவின் நியூயார்க் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கிறிஸ்டோபர் பெல்டர். இவர் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டு 18 வயதுக்குட்பட்டவராக இருந்த போது 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த ஓராண்டிற்குள் இந்த நான்கு சம்பவங்களும் நடந்துள்ளன. இதைத் தொடர்ந்து அவர் அப்போது சிறுவர் என்பதால் இவருக்கு சிறை தண்டனை வழங்கப்படாமல் இருந்தது. 2 ஆண்டுகள் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வீட்டில் இருக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவருடைய வழக்கு வந்தது. பெல்டர் 18 வயதை கடந்து விட்டதால் அவருக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்று கோரிக்க வைக்கப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் வலியுறுத்தினார். அப்போது பெல்டர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு மனப்பூர்வமாக வருந்தி மன்னிப்பு கேட்கிறேன் என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
அவருடைய வாக்குமூலத்தை ஏற்ற நீதிபதி ஒரு அதிர்ச்சிகரமாக தீர்ப்பை வழங்கினார். அதாவது பெல்டர் தன்னுடைய தவறை ஒப்புக் கொண்டதால் அவருக்கு மேலும் 8 ஆண்டுகள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்று கூறினார். அதாவது அவர் வீட்டில் இருக்க வேண்டும். இணையதளத்தை பயன்படுத்த கூடாது, இரவு நேரங்களில் வெளியே செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தார். அத்துடன் இவருடைய பெயரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கும் படியும் உத்தரவிட்டார்.
தங்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர் தற்போது 18 வயதை கடந்த பிறகும் சிறையில் அடைக்கப்படாதது பெரும் ஏமாற்றம் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துனர். மேலும் அவர்கள் தரப்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்தனர். பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு சிறை தண்டனை அளிக்காத நீதிபதியின் தீர்ப்பை பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: குவியல் குவியலாக மேகங்கள்...அர்ஜெண்டினாவில் அதிர்ந்த மக்கள்!