பரபரப்பான உலகத்தில் மக்கள் ஓடிக்கொண்டிருக்க, உணவு , உடை மற்றும் இருப்பிடம் என்பதையும் தாண்டி மனிதனின் அடிப்படை தேவைகள் அதிகரித்துள்ளன. அதன் காரணமாகவே நாளொன்றிற்கான செலவும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தான், உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் தொடர்பாக, எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பு ஆய்வு நடத்தியது. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200–க்கும் மேற்பட்ட காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.




ஆனாலும், அன்றாட வாழ்க்கைச் செலவு அடிப்படையில், ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி, ஆடம்பர நகரங்களின் பட்டியலில், நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதலிடத்தை வகிக்கின்றன. முதல் பத்து இடங்களுக்கான பட்டியலில், 3 அமெரிக்க நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி,  


செலவு மிகுந்த நகரங்களின் பட்டியல்:



  1. நியூயார்க் - அமெரிக்கா

  2. சிங்கப்பூர் - சிங்கப்பூர்

  3. டெல் அவிவ் - இஸ்ரேல்

  4. ஹாங்காங் - சீனா

  5. லாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்கா

  6. ஸுரிஜ் - சுவிட்சர்லாந்து

  7. ஜெனீவா - சுவிட்சர்லாந்து

  8. சான் பிரான்சிஸ்கோ - அமெரிக்கா

  9. பாரீஸ் - பிரான்ஸ்

  10. கோபன்ஹெகன் - டென்மார்க்


இந்த பட்டியலில் கடைசி 10 இடங்களில் உள்ள நகரங்கள், மக்கள் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களாக கருதப்படுகின்றன. இந்தப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள சிரியாவின் டமாஸ்கஸும், லிபியாவின் திரிபோலியும் செலவு குறைந்த நகரங்களாக கருதப்படுகின்றன. மேலும், இந்தப் பட்டியலில் இந்தியாவின் சென்னை, அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.


செலவு குறைந்த நகரங்களின் பட்டியல்:




161. கொழும்பு, இலங்கை






161. பெங்களூர், இந்தியா






161. அல்ஜியர்ஸ், அல்ஜீரியா






164. சென்னை, இந்தியா






165. அகமதாபாத், இந்தியா






166. அல்மாட்டி, கஜகஸ்தான்






167. கராச்சி, பாகிஸ்தான்






168. தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான்






169. துனிஸ், வடக்கு ஆப்ரிக்கா






170. தெஹ்ரான், ஈரான்






171. திரிபோலி, லிபியா






172. டமாஸ்கஸ், சிரியா


இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த சென்னைக்கு 164-வது இடமும், அகமதாபாத்துக்கு 165-வது இடமும், பெங்களூருக்கு 161-வது இடமும் கிடைத்துள்ளன.