US India Trade: இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக இருந்த புகைப்படம், மேற்கத்திய நாடுகளின் ஆதிக்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

”புதிய உலக ஆளுமை”

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் ஒன்றாக இடம்பெற்ற புகைப்படமானது, ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தப்படும் மற்றும் நிர்ணயிக்கப்படும், ”புதிய உலக ஒழுங்கு” எப்படி இருக்கும் என்பதை உணர்த்துவதாக அமெரிக்கா ஊடகங்கள் எழுதத் தொடங்கியுள்ளன. சிரித்தபடியும், மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொண்டபடியும் அண்மையில் முடிவடைந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தீவிரமான வரிகளால் பாதிக்கப்பட்ட பல சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மேற்கத்திய நாடுகளில் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு அமெரிக்கர்களின் முதுகுத்தண்டையும் உலுக்கி எடுத்துள்ளன என்று, அந்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரான வான் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

”அமெரிக்கர்களுக்கு நல்லதல்ல”

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசுகையில், “வரலாற்று ரீதியாக இன்றைய நாளை மிகப் பெரிய விஷயமாக நாம் திரும்பிப் பார்க்கப் போகிறோம், ஏனென்றால் ஜி ஜின்பிங் புதினுடன், இந்தியாவில் இருந்து மோடியுடன், ஈரானின் தலைவருடன், வட கொரியாவின் தலைவருடன் இருக்கும் புகைப்படம் ஒவ்வொரு அமெரிக்கரின் முதுகெலும்பையும் நடுங்க வைக்கும். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு புதிய உலக ஒழுங்கின் அடையாளம்.

அவர்கள் அதை ஒரு பன்முனை உலகம் என்று அழைக்கிறார்கள். நான் அதை மேற்கு இப்போது ஒரு பெட்டியில் வைத்திருக்கிறது. அமெரிக்காவும் சீனாவும் ஒன்றாகவும், ரஷ்யா மட்டும் தனியாகவும் இருந்தது. இப்போது நாம் முக்கோணத்தின் மோசமான முடிவில் இருக்கிறோம். எல்லோரும் நமக்கு எதிராக இருக்கிறார்கள். அது அமெரிக்காவிற்கு நல்லதல்ல” என எச்சரித்துள்ளார்.

ட்ரம்பை எச்சரிக்கும் ஊடகங்கள்:

ஜின்பிங்கிற்கும் புதினுக்கும் இடையிலான நட்புறவு, அமெரிக்காவை சவால் செய்யும் மாற்று உலக ஒழுங்கின் தலைவர்களாக அவர்களுக்கு இடையேயான நெருங்கிய பிணைப்பை வெளிப்படுத்துகிறது என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் மத்திய ஆசியாவில் ஒரு பிராந்திய மன்றமாக கருதப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு, அளவிலும் செல்வாக்கிலும் வளர்ந்துள்ளது. இது அமெரிக்க உலகளாவிய தலைமைக்கு ஒரு வளர்ந்து வரும் சவாலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று CNN தெரிவித்துள்ளது. அமெரிக்க ஆய்வாளர்கள் அமெரிக்க எதிர்ப்பு என்று முத்திரை குத்தும் நான்கு நாடுகளான ஈரான், வட கொரியா, சீனா மற்றும் ரஷ்யாவின் முதல் கூட்டம் இது என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மை ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் ஆட்டம் காண தொடங்கியுள்ளது என்பதையே ஊடகங்கள் எச்சரிக்க தொடங்கியுள்ளன. .