Watch Video: வில் ஸ்மித் விட்ட அறைக்கு.. மனைவி ஜடாவின் ரியாக்ஷன் தெரியுமா? வீடியோ வைரல்
ஆஸ்கர் விருது விழாவில் ,தன்னுடைய தலையில் முடி இல்லாததால் பிரபல நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி உருவகேலிக்கு ஆளான சம்பவம் வைரலானது. இப்போது, வில் ஸ்மித், கிற்ஸ் ராக்கை அறைந்தற்கு ஜடா பிங்கெட் ரியாக்ச் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்கர் விருது விழாவில் தனது மனைவியை உருவக்கேலி செய்ததற்காக நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்தார் வில் ஸ்மித். தனது கணவரின் செயலுக்கு, ஜடா பிங்கெட் ரியாக்ட் செய்யும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தனது மனைவி ஜடா பிங்கெட் (Jada Pinkett) பற்றி உருவக்கேலி செய்ததற்காக ஆஸ்கர் விருது நிகழ்வில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை (Chris Rock) டிகர் வில் ஸ்மித் (Will Smith), கன்னத்தில் அறைந்தார்.
இந்த வீடியோவில் ஜடா ஸ்மித் தனது கணவர் வில் ஸ்மித் செயலுக்கு சிரிப்பது போன்று வீடியோவில் உள்ளது.
இது குறித்து வீடியோ வைரலாகி, பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. பின்னர், வில் ஸ்மித் தான் நடந்து கொண்டதற்கு, நான் என்றைக்கும் அன்பு மற்றும் அக்கறைக்கான தூதனாக இருக்க விரும்புகிறேன். நான் இப்படி நடந்து கொண்டததற்காக ஆஸ்கர் விழா குழுவினர், மற்றும் சக போட்டியாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.’ என்றார். ஆனால், அவர் கிறிஸ் ராக்கிடன் மன்னிப்பு கேட்பதாக கூறவில்லை.
பின்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,ஒரு விழா மேடையில் நகைச்சுவை என்பது இயல்பானது தான் என்றாலும், என்னுடைய மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்தது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. காதல் உங்களை பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்ய வைக்கும்.
அன்பு நிறைந்த இந்த பூமியில் வன்முறைக்கு இடமில்லை. இந்த செயலுக்கு மிகவும் வருந்துகிறேன்.எனது செயலுக்காக கிறிஸ் ராக்கிடமும், நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமும், நிகழ்ச்சியை நேரிலும் தொலைக்காட்சி வழியாக பார்த்த பார்வையாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.