Nepal Plane Missing: 4 இந்தியர்கள்.. மொத்தம் 22 பேர்.. நடுவானில் காணாமல் போன நேபாள விமானம்!
நேபாளம் நாட்டில் உள்ள போஹ்ராவிலிருந்து (Pokhara) ஜாம்சோம் (Jomsom) நகருக்கு பறந்த விமானம் மாயமானதாக விமான துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Continues below advertisement

கோப்புப்படம்
போஹ்ராவிலிருந்து (Pokhara) ஜாம்சோம் (Jomsom) நகருக்கு 22 பயணிகளுடன் புறப்பட்ட Tara Air's 9 NAET என்ற விமானம் பயணித்துக் கொண்டிருக்கும் போது, காலை 9.55 மணிக்கு கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர், மற்றும் ஜப்பானைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் மாயமானது குறித்து தேடும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், இது குறித்து முழுமையான தகவல் விசாரணையில் தெரிய வரும்.
இந்த விமானம் ஜாம்சோமில் உள்ள மஸ்டாங் மாவட்டத்தில் வானில் தெரிந்ததாகவும், தொடர்பை இழப்பதற்கு முன்பு, விமானம் தெளலாகிரி மாவட்டத்தை நோக்கி பயணிக்க திசை திருப்ப சொல்லப்பட்டதாகவும் மஸ்டாங் மாவட்ட தலைமை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.