நேபாள மலைப் பகுதிகளில் மாயமான விமானத்தின் பாகங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் 4  பேர் உட்பட 22 பேருடன் சென்ற விமானம் நேற்று மாலை தாரா ஏர் விமானம் சனோஸ்வேர், தசாங்-2, முஸ்டாங் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. 






இந்தநிலையில், தாரா ஏர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை சனோஸ்வேர், தசாங்-2, முஸ்டாங்கில் நேபாள ராணுவம் கண்டறிந்துள்ளது. இதில், பயணம் செய்தவர்கள் நிலைமை என்ன என்பது குறித்தும், உயிரிழப்பு குறித்தும் இதுவரை நேபாளம் ராணுவம் அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால், விபத்து நிகழ்ந்த இடத்தின் புகைப்படத்தை மட்டும் நேபாள ராணுவம் வெளியிட்டுள்ளது. 


நேபாள விமான விபத்து :


நேற்று காலை மாயமான விமானம் குறித்த தகவலை பெற தேடுதல் மற்றும் மீட்புக்குழு துரிதப்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து, பனிப்பொழிவு காரணமாக நேற்று நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து காலையில் மீண்டும் தேடுதல் பணிகளை நேபாள ராணுவம் தொடங்கியது. 






மஸ்டாங் மாவட்டத்தில் பனிப்பொழிவுக்குப் பிறகு விபத்துக்குள்ளான தாரா ஏரின் 9 NAET இரட்டை இயந்திர விமானத்தைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண