நமது பூமி இந்த ஆண்டு இறுதிக்குள் 8 பில்லியன் மக்கள் தொகையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகளுக்கு இந்த பிரச்சனை ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்தால் இன்று இறப்பு சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் பிறப்பு சதவிகிதமும் கூடுவதால் மக்கள் தொகை நாளுக்குநாள் பெருகிக்கொண்டே வருகிறது. இதனால் உலக நாடுகள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். இது நிச்சயம் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். அதன் அவசியத்தையும் அதனால் ஏற்பட கூடிய பிரச்சனைகளின் முக்கியத்துவத்தையும் பற்றி எடுத்துரைப்பதற்காக ஆண்டுதோறு ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை தினமாக அனுசரிக்கப்படுகிறது. COVID-19 பரவலினால் ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக காணப்பட்டாலும் பெண்களும் சம அளவிலான சமூக மற்றும் பொருளாதார இன்னல்களை எதிர்கொண்டனர். உலக மக்கள் அனைவரும் வீட்டுக்குளேயே முடங்கி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்க தொடங்கின. கொரோனா நோய்த்தொற்று ஒருபுறமும் இருப்பினும் குழந்தைகள், முதியவர்கள், குடும்பம் என்று அனைத்தையும் பராமரித்ததில் பெண்களின் பங்களிப்பு மிகவும் அதிகம். இதனால் அவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரிதளவு பாதிக்கப்பட்டனர். பெண்களில் பெரும்பாலானோர் ஊட்டச்சத்து குறைபாடினால் அவதிபட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்