நாசாவின் ஓரியன் காப்ஸ்யூல் பூமியின் வளிமண்டலத்தில் பாய்ந்து சந்திரனைச் சுற்றி பயணத்தை மேற்கொண்ட பிறகு பசிபிக் பெருங்கடலில் விழுந்தது, அப்பல்லோவின் சந்திர பயணத்தை தொடர்ந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் ஆர்ட்டெமிஸ் (nasa moon mission) சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் முதல் திட்டத்தை நிறைவு செய்தது.
கம்ட்ராப் (gumdrop shaped) வடிவிலான ஓரியன் காப்ஸ்யூல், சென்சார்கள் மூலம் வயர் செய்யப்பட்ட மூன்று டம்மி பொம்மைகளை கொண்டு சென்றது. இது மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தில் இருந்து காலை 9:40 மணிக்கு PST (1740 GMT) கடலில் விழுந்தது. இதன்மூலம் ஆர்டெமிஸ் தனது முதல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. 2025க்குள் ஆர்ட்டெமிஸ், விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும். "இது ஒரு சவாலான பணியாகும், வெற்றி என்றால் இப்படித்தான் இருக்கும்" என நாசாவின் ஆர்ட்டெமிஸ் I மிஷன் மேலாளர் மைக் சரஃபின் செய்தியாளர்களிடம் கூறினார்.
அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டரும் விரைவு படகுகளின் குழுவும் சுமார் ஐந்து மணிநேரம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுகளுக்குப் பிறகு காப்ஸ்யூலை அமெரிக்க கடற்படைக் கப்பலில் ஏற்றி சான் டியாகோவிற்கு எடுத்துச் சென்றனர்.
பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன் சந்திரனுக்கு மேலே சுமார் 79 மைல்கள் (127 கிமீ) கடந்து ஒரு வாரத்திற்குள் 25 நாள் பயணத்தை மூடித்து, விண்வெளியில் அதன் தொலைதூரப் புள்ளியை கிட்டத்தட்ட 270,000 மைல்கள் (434,500 கிமீ) அடைந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்தது. பூமிக்கு திரும்புவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன், பூமியின் வளிமண்டலத்தில் அது சேகரித்த தகவல்கள் மற்றும் மேற்கொண்ட ஆராய்ச்சி காப்ஸ்யூலை வெளியேற்றுவதற்கு சுமார் 20-நிமிடங்கள் வெப்பக் கவசத்தை ஏற்படுத்தி (சுமார் 5000 டிகிரி ஃபாரன்ஹீட்) வெளியேற்றியது.
மிஷன் இன்ஜினியர்கள் ஆர்ட்டெமிஸ் I மிஷனின் தரவை ஆய்வு செய்ய பல மாதங்கள் செலவிடுவார்கள். 2024 ஆம் ஆண்டிலேயே ஆர்ட்டெமிஸ் II விமானம் சந்திரனைச் சுற்றி வரலாம், அதைத் தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகளில் விண்வெளி வீரர்கள் ஆர்டெமிஸ் III சுமந்து செல்லும் அதில் ஒரு பெண் விண்வெளி வீரர் அடங்குவர்.