பிரபஞ்சத்தின் சுவாரஸ்யமான கூறுகளில் ஒன்று கருந்துளை. மிக அடர்த்தியானதாகவும், அதிக ஈர்ப்பு விசை கொண்டதாக உள்ள கருந்துளையிடமிருந்து ஒளி கூட தப்பி பயணிக்க முடியாது!
கருந்துளை
கருந்துளை முதன்முதலாக 1971ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட நிலையில், கருந்துளை பற்றிய ஆராய்ச்சிகள் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
சில பெருநட்சத்திரங்களின் வெடிப்பு நிகழும்போது, அந்த அழிவிலிருந்து கருந்துளைகள் பொதுவாக உருவாகும் எனக் கூறப்படுகிறது. அப்படி உருவாகும் கருந்துளைகளில் சில மிகவும் பெரியவை. நமது சூரியனைப் போல் பில்லியன் மடங்கு நிறை கொண்டவை.
கருந்துளையின் ஒலி!
இப்படிப்பட்ட கருந்துளையின் ஒலி எப்படி இருக்கும் என்பது குறித்த வீடியோ ஒன்றை நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விண்வெளியின் வெற்றிடத்தில் ஒலி பயணிக்காது என பொதுவாக நம்பகப்படும் நிலையில், திரைப்படங்களில் காண்பிக்கப்படும் பேய்கள், வேற்றுகிரகவாசிகளின் முனகல்கள் மற்றும் அலறல்கள் போன்ற சத்தங்கள் போன்ற ஒலியை நாசா பகிர்ந்துள்ளது.
கருந்துளைக்கு மிக அருகில் கைப்பற்றப்பட்டுள்ள இந்த ஒலி அமானுஷ்யமானதாகவும் கூக்குரல்கள் போன்றும், சலசலப்புகளுடனும் சிறிது அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
200 மில்லியன் ஒளி ஆண்டு தொலைவு
ஆனால், நாசா வெளியிட்டுள்ள இந்த ஒலி இணையத்தில் பெருமளவில் பெருக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் உண்மையான ஒலி, மனித செவிப்புலன் வரம்புக்குள் வராத அளவுக்கு குறைவாகவே உள்ளது.
பூமியிலிருந்து 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கருந்துளையில் இருந்து இந்த ஒலி அலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கருந்துளை பெர்சியஸ் கேலக்ஸி கிளஸ்டர் என்று அழைக்கப்படும் மையத்தில் காணப்படுகிறது.
நாசா வெளியிட்டுள்ள கருந்துளையின் இந்த ஒளி அறிவியலாளர்களையும் ,இயற்பியலாளர்களையும் சுவாரஸ்யத்தில் ஆழ்த்தியுள்ளது.