ஸ்பைடர் மேன்:
மார்வல் ஸ்டுடியோஸ் படங்களுக்கு நம் நாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அத்தனை ரசிகர்கள் ஏராளம். அதிலும் ஸ்பைடர் மேன் படங்கள் என்றால் அனைவருக்கும் தனி பிரியம். அதிலும் சிலர் சிலந்தியை வேண்டுமென்றே தன் மேல் கடிக்கவிட்டு “சீக்கிரமே ஸ்பைடர் மேனாக மாறி விடுவோம்” என என்னும் அளவிற்கு அந்த படங்களின் மீது பித்து பிடித்து போயிருந்தனர். மார்வல் படைப்பான இது, குழந்தைகளுக்கு பிடித்த காமிக் புத்தகமாகவும், கார்டூன் ஷோவாகவும் வெளிவந்து கொண்டிருந்தது. பின்னர் இதை படமாக்கும் முயற்சியில் மெல்ல இறங்கினார் மார்வல் கிரியேட்டர், ஸ்டான் லீ.
டோபி மெக்குயர் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியானது முதல் ஸ்பைடர் மேன் திரைப்படம். வலைகளை வீசி வில்லன்களை பிக்கும் ஹீரோ, மண் மனிதன், ஆக்டோபஸ் கைகளை கொண்டு அனைவரையும் அழிக்கும் கொடூர குணம் கொண்டவன் என புது புது எளிமென்ட்ஸை புகுத்தியிருந்தார் ஸ்டான் லீ. இதைப் பார்த்தவர்கள் பிரமித்து போக, சில வருட இடைவெளியிலேயே அடுத்தடுத்து ரலீஸானது ஸ்பைடர் மேனின் அடுத்த இரண்டு பாகங்கள்.
தி அமேஸிங் ஸ்பைடர் மேன்:
மூன்று ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த டோபி, ஏனோ அதன் பிறகு அந்த கேரக்டரில் நடிக்க வரவில்லை. இதனால் வேரு ஒருவரை வைத்து ஸ்பைடர் மேனாக மாற்றி தி அமேஸிங் ஸ்பைடர் மேன் படம் எடுக்கப்பட்டது. இதில் ஆண்ட்ரூ கார்பீல்ட் ஹீரோவாக அறிமுகமானார். எப்போதும் போல வில்லன்களை எதிர்த்து சண்டையிட்டு உலகத்தை காப்பாற்றி வந்த ஸ்பைடர் மேனின் கதை, இம்முறை சற்று வித்தியாசமாக காட்டப்பட்டிருந்தது. ஒல்லியான உடல், அலட்டிக் கொள்ளாத நடிப்பு என இருந்த இந்த ஸ்பைடர் மேனை ஒரு சிலருக்கு மட்டுமே பிடித்திருந்தது. இதனாலேயே நம் அமேஸிங் ஸ்பைடர் மேன் படங்களை சிலர் அன்டர் ரேட்டட் கேட்டகிரியில் வைப்பதுண்டு. இந்த படங்கள் பெரிதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததால், அப்படியே இன்னொரு ஸ்பைடர் மேனை கையோடு கண்டுபிடித்தது மார்வல்.
ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங்:
பிரிட்டிஷ் நடிகரான டாம் ஹாலண்ட் புதிய ஸ்பைடர் மேனாக ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங் படத்தில் அறிமுகமானார். அதுவரை அமெரிக்க நடிகர்களை மட்டுமே ஸ்பைடர் மேன் ரோலில் நடிக்க வைத்த மார்வல் இதன் மூலம் புதுமையை புகுத்தியது.டாம் ஹாலண்டின் பால் வடியும் முகத்தை பார்த்த ரசிகர்கள், “இவரிடம் ஸ்பைடர் மேனுக்கு ஏற்ற எனர்ஜீ இருக்குமா?” என சந்தேகித்தார்கள். ஆனால் அனைவரையும் அடேங்கப்பா சொல்ல வைக்கும் அளவிற்கு ஸ்பைடர் மேன் கதாப்பாத்திரமாக நடித்து ‘அப்ளாஸ்’ வாங்கினார் டாம். இதைத்தொடர்ந்து பிரபல நடிகர் ஜேக் கிலென்ஹால் வில்லனாக நடிக்க, கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது Spider Man-Far From Home. இது மட்டுமன்றி, இன்பினிட்டி வார், சிவில் வார், என்ட் கேம் என அவெஞ்சர்ஸ் படங்களிலும் ஸ்பைடர் மேனாக கெத்து காட்டிய டாம் அனைவருக்கும் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார்.
ஸ்பைடர் மேன்-நோ வே ஹோம்:
என்னதான் புது ஸ்பைடர் மேன்கள் நன்றாக நடித்திருந்தாலும், ரசிகர்களால் டோபியை ஏற்றுக்கொன்ற அளவிற்கு யாரையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டோபி, ஆன்ட்ரூ, டாம் மூன்று பேரும் இணைந்து ஒரு படத்தில் இணைந்து நடிக்கமாட்டார்களா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் வெளியானது, ஸ்பைடர் மேன்-நோ வே ஹோம்.
மல்டி வர்ஸாக உருவாக்கப்பட்டிருந்த கதைக்களத்தையும், மூன்று ஸ்பைடர் மேன்களும் இணைந்து நடித்துள்ளதையும் சீக்ரெட்டாக வைத்திருந்தது படக்குழு. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படம் வெளியாகி, பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வசூல் வேட்டை புரிந்தது. ஸ்பைடர் மேன் பட சீரிஸை அதுவரை பார்க்காதவர்களும் படம் குறித்து வெறிகொண்டு பேசும் அளவிற்கு ‘ரீச்’ ஆனது இந்த மல்டிவர்ஸ். படத்தின் கொண்டாட்டம் சற்று அடங்கிய பிறகு, நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்டது ஸ்பைடர் மேன்-நோ வே ஹோம்.
படத்தின் ரீ-ரிலீஸ்
ரசிகர்கள் படத்தை ரீ-வாட்ச் செய்ய ஏதுவாக, ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக மார்வல் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து இணையதள பதிவையும், ஸ்பைடர் மேன் திரைப்படங்களின் கணக்கிலிருந்து பதிவிட்டுள்ளது மார்வல்!
அடுத்த மாதம் 2ஆம் தேதி மீண்டும் வெளியாகவுள்ள இப்படத்திற்கு இப்போதே ‘ஹைப்’ அதிகமாகி வருகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்றுமுதல் தொடங்குகிறது. நீளம் காரணமாக சில காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தன அதனை வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கைகளை வைத்து வந்தனர். அதற்கிணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்குமோ என திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. எது எப்படியோ, ஸ்பைடர்-மேன் ரகிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!