ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பினர்.


சர்வதேச விண்வெளி நிலையம்:


சர்வதேச விண்வெளி நிலையம் என்பது பூமிக்கு அப்பால் சுமார் 360 கி.மீ தொலைவில் பூமியைச் சுற்றி வரும் விண்கலமாகும். இங்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சென்று, பல நாட்கள் தங்கி ஆய்வு செய்வது வழக்கம். அங்கு சென்ற விண்வெளி வீரர்கள், வானியல் குறித்தான பல்வேறு தகவல்களை ஆராய்ந்து பூமிக்கு தகவல் தெரிவிப்பர். 


பூமியை வந்தடைந்த விண்வெளி வீரர்கள்:


ரஷியாவின் நோவிட்ஸ்கி மற்றும் பெலாரஷியன் மெரினா வாசிலெவ்ஸ்கயா ஆகியோர் சோயுஸ் விண்கலத்தில் கடந்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றிருந்தனர்.  கடந்த செப்டம்பர் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்க விண்வெளி வீரர் லொரல் இருந்துள்ளார். இவர் சுமார் 200 நாட்கள் பூமியைச் சுற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


விண்வெளி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு இன்று( ஏப்ரல் 06 ) திரும்பினர். இவர்கள் மூலம் விண்கலம் மூலமாக பாராசூட்டின் உதவியுடன் கஜகஸ்தானில் பாதுகாப்பாக தரையிறங்கி விண்வெளியின் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தனர்.


 இந்நிலையில் மூன்று நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பியதையடுத்து, அவர்கள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் உடல்நிலை குறித்து பரிசோதனை நிகழ்த்தப்படும் என கூறப்படுகிறது


இவர்கள் மூவரும் தரையிறங்கும் காட்சியை ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனமும், அமெரிக்காவின் நாசா விண்கலமும் வெளியிட்டன.


 






மூன்று விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் (ஸ்பேஸ் கேப்ஸ்யூல்) இருந்து இழுக்கப்பட்டு கேமராக்களுக்காக புன்னகைக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.






.