மியான்மர் நாட்டில் தற்போது நடந்து வரும் ராணுவ ஆட்சியில் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் அங்கு நடப்பில் இருந்த ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து மின் ஆங் தலைமையிலான ராணுவ ஆட்சி மியான்மரை தவசப்படுத்தியது. மேலும் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடும் மக்கள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது மியான்மர் ராணுவம்.



  


ராணுவ ஆட்சியை எதிர்த்து மியான்மரில் மக்கள் கொட்டும் மழையையும் பொறுப்படுத்தாமல் போராடிவருகின்றனர். அவ்வாறு போராடும் மக்கள் மீதும் அந்நாட்டு ராணுவம் தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், ஈஸ்டர் முட்டைகளில் தங்களது ராணுவத்தை எதிர்த்து வாசகங்களை எழுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




படாக் புரட்சி : 


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Anti-coup protesters launched the &quot;Padauk Revolution&quot; in Yangon on Monday. The yellow flower locally called &quot;padauk&quot; is one of the primary symbols of Myanmar&#39;s New Year water festival. <a >#WhatsHappeningInMyanmar</a> <a >pic.twitter.com/2R155Qc8VB</a></p>&mdash; Myanmar Now (@Myanmar_Now_Eng) <a >April 5, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


இந்நிலையில் ஜனநாயக ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த திங்கட்கிழமையன்று யாங்கோனில் "படாக் புரட்சியை" தொடங்கியுள்ளனர். உள்நாட்டில் "படாக்" என்று அழைக்கப்படும் மஞ்சள் நிற பூக்கள் மியான்மரின் அடையாளங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மியான்மரில் மக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான அடக்குமுறையை மியான்மார் ராணுவம் அரங்கேற்றி வருகின்றது .