துபாயில் ஆனந்த் அம்பானிக்கு சொந்த வீடு :


சமீப காலமாகவே துபாய் அரசு வெளிநாட்டவர்களை அந்த நாட்டில் குடியமர்த்த மிகப்பெரிய ஆர்வம் காட்டி வருகிறது. பல பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கு அந்நாட்டில் தங்க ஊக்கப்படுத்தி வரும் நிலையில் , பனை மர வடிவில் செயற்கையாக தீவு ஒன்றையும் உருவாக்கி , அதை வெளிநாட்டு பிரபலங்களுக்கு விற்பனை செய்து வருகிறது.  அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சார்பில் பனை தீவில் மிகப்பெரிய வில்லா ஒன்று வாங்கப்பட்டிருப்பதாக துபாய் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்த வீடு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக வாங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பொதுவாக துபாய் சொத்து ஒப்பந்தம் இரகசியமானதாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் வாங்கப்பட்ட ஆடம்பர மாளிகை குறித்தான தகவலை சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தற்போது கசிய விட்டிருக்கின்றன.அம்பானியின் நீண்டகால நண்பரும் , கார்ப்பரேட் விவகாரங்களின் இயக்குநரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  பரிமல் நத்வானி வில்லாவை நிர்வகிப்பார் என கூறப்படுகிறது.




 


என்னென்ன வசதிகள் இருக்கு :



ஆனந்த அம்பானிக்காக வாங்கப்பட்டுள்ள இந்த பீச் வியூ கொண்ட ஆடம்பர வீட்டில் விலை 80 மில்லியன் டாலர் என துபாய் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த  கடற்கரையோர மாளிகையானது பனை வடிவ செயற்கைத் தீவுக்கூட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது மற்றும் 10 படுக்கையறைகள், ஒரு தனியார் ஸ்பா மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற குளங்கள் (indoor and outdoor pools) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.தீவை பொருத்தவரையில் பாம் ஜுமைராவின் தீவில்  ஆடம்பரமான ஹோட்டல்கள், பளபளப்பான கிளப்புகள், ஸ்பாக்கள், உணவகங்கள் மற்றும் பாரசீக வளைகுடாவின்  கடல் அழகை ரசிக்கும் வகையில்  அடுக்குமாடி கோபுரங்கள் உள்ளன.  பாம் ஜுமைரா தீவு  கடந்த 2001 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 2007 முதல் அங்கு கோடீஸ்வர்கள் குடிபெயற துவங்கினர் .


முகேஷ் அம்பானி மும்பை வீடு எப்படி இருக்கும் :


ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, அம்பானிக்கு மொத்தம் $93.3 பில்லியன் சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. உலக பணக்காரர்களில் ஒருவரான இவர் மும்பையில் பிரம்மாண்டமான வீட்டில்தான் வசித்து வருகிறார். அந்த வீட்டில்  27-அடுக்கு கொண்ட வானளாவிய கட்டிடம், மூன்று ஹெலிபேடுகள், 168 கார்களுக்கான பார்க்கிங், 50 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், ஒரு பெரிய பால்ரூம் மற்றும் ஒன்பது லிஃப்ட் ஆகியவை இருக்கும்.





துபாயின் சொத்துச் சந்தை, அதன் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது. புதிய விதிகளின் படி முதலீட்டாளர்கள் குறைந்தது 2 மில்லியன் திர்ஹாம் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கினால் 10 வருட விசாவைப் பெறலாம். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மக்கள்தொகையில் 80% க்கும் அதிகமான வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் உள்ளனர் என்பது கூடுதல் தகவல் .