இத்தாலியில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் பயந்து ஓடினர். 


கடந்த 2 நாட்களாக இத்தாலியின் வடமேற்கு பகுதியில் பெய்து வந்த கனமழையால் நகரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இத்தாலியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வீடியோ இன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. 


பார்டோனேச்சியா நகருக்கு மத்தியில் மெட்ரோவின் ஆறு ஓடுகிறது. தொடர்ந்து பெய்த கனமழையால் மெட்ரோவின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை வெள்ளத்தில் இருந்து மீள்வதற்கு நகரத்தின் மையப்பகுதியில் ஏற்பட்ட சேற்று சுனாமி மக்களை நடுங்க வைத்துள்ளது. 






சாலையில் சிலர் நடந்து சென்றிருந்த போது திடீரென மரத்தையும் தாண்டி கொண்டு வந்த சேற்றுடன் வந்த வெள்ளநீரால் அப்பகுதியில் இருந்தவர்கள் அச்சத்தில் ஓடினர். சேற்றுடன் சூழ்ந்த நீரால் அங்கிருந்த மரங்கள், வாகனங்கள், வீடுகளில் சேறு சூழ்ந்தது. இந்த சேற்று சுனாமியில் உயிர்சேதம் இல்லை என்றாலும் 120 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 



வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் சேறு படிந்ததால் அதை அகற்றும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகள் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஐரோப்பா பகுதி மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால், பருவநிலை பாதிப்பு பகுதிகளில் பட்டியலில் இத்தாலியின் பார்டோனேசியாவும் இணைந்துள்ளது. 


ஐரோப்பா போன்றும் ஆசிய நாடுகளும் பருவநிலை மாற்றத்தால் பாதிப்பை சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 80 பேரிடர்கள் ஏற்பட்டதில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும், ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உலக வானிலை அமைப்பான உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், அதிகளவில் பருவநிலை மாற்றம் ஏற்படும் கண்டமாக ஆசியா இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பேரிட்ர் தொடர்பாக கடந்த ஆண்டு உலக நாடுகளுக்கு ஐ.நா. எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில், வறட்சியால் ஆசியாவின் பல பகுதிகளில், குறிப்பாக சீனாவில் நீர்மட்டம் குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக 2002 – 2021 காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பை விட வரும் காலங்களில் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.