இலங்கையின் வடக்கு பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ராணுவ படையணிகளுக்காக வீணடிக்கப்படும் பணம்- புலம்பெயர் அமைப்புகள் குற்றச்சாட்டு

 

இலங்கையின் வடக்கு பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள 16 ராணுவ படையணிகளுக்கு, அந்நாட்டு அரசு பணத்தை வீணடிப்பதாக புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகையால் இலங்கையின் வடக்கு பகுதியில் இருக்கும்  ராணுவ படையணிகளை மீளப் பெறுமாறு புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.வடக்கு பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 16 ராணுவப்படையணிகளுக்கு இலங்கை அரசு பெருமளவிலான தொகை பணத்தை செலவிட்டு வருவதாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் குற்றஞ்சாட்டியிருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இந்த ராணுவ படையணிகளின் செலவீனம்  காரணமாக, அரசாங்கத்தின் டாலர் கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த வருடமும்
  2,55,000  பாதுகாப்பு படையினருக்காக  373 பில்லியன் ரூபா பெருமளவிலான பணத்தை இலங்கை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இந்தப் படையணிகளை பராமரிப்பதற்கு இலங்கை அரசு பெருமளவு பணத்தை செலவழிப்பதாக புலம்பெயர் அமைப்புகள்,  சர்வதேச நாணய நிதியத்தின் அவதானத்துக்கு கொண்டு  சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணமென சுட்டிக்காட்டப்படுகிறது .

 

ஆகவே இந்த படையணிகளை வடக்கிலிருந்து விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் அதிகளவான பண விரயமாதல் தவிர்க்கப்படும் என சொல்லப்படுகிறது.இந்த 16 ராணுவ படையணிகளையும் தனியாக பராமரிப்பதன் காரணமாகவே  இலங்கை அரசின் டாலர் கையிருப்பு குறைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

இலங்கை அரசின் ராணுவத்திற்கான செலவீனங்கள் குறித்து உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் புலம்பெயர் அமைப்புகளால் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.கடந்த வருடங்களோடு ஒப்பிடும்போது இலங்கை ராணுவ படையணிகளுக்கான செலவீனம் 14 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தற்போதுள்ள கோத்தபாய ராஜபக்ஷ அரசின் தேர்தல் கொள்கை என்பது தேசிய பாதுகாப்பு ஆகும்.

 

ஆகவே குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் ராணுவ படையணிகளை வைத்து அதற்காக பில்லியன் கணக்கில் செலவிடுவது என்பது இலங்கையின் வருமானத்தை மிகவும் பாதிக்கும் என கருதப்படுகிறது .பொதுவாக  இலங்கையில் இறுதி யுத்தம் முடிந்த பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செலவிடப்படும் பணத்தொகை என்பது மிகவும் அதிகமானது என ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன .

 

இந்நிலையில் வடக்கு பிரதேசங்களில் அதிகளவான ராணுவத்தினரை குவித்து அவர்களுக்கு தொடர்ந்து செலவுகளை செய்வது என்பது தற்போதைய சூழ்நிலையில் வீணானது என சொல்லப்படுகிறது.வடக்கு கிழக்கு பகுதிகளை பொறுத்த அளவில் தற்போது அங்கு அமைதியான சூழல்  நிலவுகிறது, ஆனால் பெரும்பான்மையான சிங்கள மக்கள் வாழும் தென்னிலங்கை பகுதியில் தற்போது பாதுகாப்பாற்ற ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது .ஆகவே வடக்கு பகுதியில் இருக்கும் ராணுவத்தினரை ,அகற்றி தென் இலங்கையின் பாதுகாப்பு பணியிகளில் நாட்டம் செலுத்துவது சிறந்தது என கருதப்படுகிறது.இலங்கையின் 30 வருட கால யுத்த வரலாற்றில் பாதுகாப்பு பணிகளுக்காக, ராணுவத்தினருக்காக இலங்கை அரசு அதிகளவிலான பணத்தை செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னரும் பாதுகாப்பற்ற பகுதிகள் என கருதப்படும் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அதிக அளவிலான ராணுவத்தினரை குடியமர்த்தி அவர்களுக்கு வீண் செலவுகளை இலங்கை அரசு செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கின்றன.ஆகவே இந்த செலவுகளை குறைக்க பட்சத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இது ஒரு குறித்த தீர்வாக இருக்கும் என புலம்பெயர் அமைப்புகளால் கருதப்படுகிறது .நாட்டு மக்கள் வறுமையில் தவிக்கும் இந்த நிலையில், இலங்கை அரசு ,பாதுகாப்பு நடவடிக்கை எனக்கூறி ராணுவத்திற்கு தொடர்ந்தும் பணத்தை ஒதுக்கீடு செய்து வருவதில் எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பப்படுகிறது.