MK Stalin Dubai Visit LIVE: துபாயில் தொழில் முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
MK Stalin Dubai Visit LIVE Updates: தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்னையில் இருந்து தனி விமான மூலம் துபாய் சென்றுள்ள முதலமைச்சர், உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை இன்று திறந்து வைக்கிறார்
தொழில் புரிவதற்கும், முதலீடு செய்வதற்கும் தமிழ்நாட்டின் கதவு எப்போதும் திறந்திருக்கும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளின் வளர்ச்சியில் தமிழர்கள் பங்கு மிக முக்கியமானது, அளப்பறியது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூபாய் 1600 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூபாய் 1600 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்களுக்கான சந்திப்பு மாநாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வணக்கம் என கூறி தனது உரையை தொடங்கினார்.
உலகமே வியந்து பார்க்கும் நகரமாக துபாய் வளர்ந்திருக்கிறது என ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்களுக்கான சந்திப்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு முதலீட்டாளர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
துபாயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு முதலீட்டாளர்களை சந்தித்து வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்
துபாயில் இன்று தமிழ் மக்களை சந்திக்க இருக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு, துபாயில் உள்ள துபாய் தாஜ் ஹோட்டலில் முதலீட்டாளர்களை சந்திக்க இருக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
துபாய் பயணம் முடித்துவிட்டு இந்தியா திரும்பும்போது பிரதமரைச் சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு அரங்கை தொடங்கி வைத்த மாண்புமிகு முதலமைச்சரை சந்தித்த இசை அமைப்பாளர் திரு. ஏ.ஆர.ரகுமான் தனது இசை அரங்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற முதலமைச்சர் ஆர் ரகுமானின் ஸ்டுடியோவிற்கு சென்றார். அங்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்கும் மூப்பில்லா தமிழே... தாயே என்ற ஆல்பத்தை முதலமைச்சருக்கு போட்டுக் காட்டினார்...
அரசு முறைப்பயணமாக துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'Karunanidhi A Life' புத்தகத்தை அமீரக அமைச்சருக்கு வழங்கியுள்ளார்.
அரசு முறைப்பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அபுதாபியில், முபதாலாவில் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காலித் ஏஐ குபைசி, அபுதாபி சாம்பர் கூட்டமைப்பின் தலைவர் அப்துல்லா முகமது அல் மசாரோய் ஆகியோர்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
துபாய் விமான நிலையத்தில், ஐக்கிய அமிரகத்திற்கான இந்திய துணைத் தூதர் அய்மன்புரி, துபாய் அரசு உயர் அலுவலர்கள் இசா அப்துல்லா அல்கோரர், ஸ்காலித் ஜமால் அல்ஹை ஆகியோர் முதலமைச்சரை வரவேற்றனர்
அரசு முறை பயணமாக துபாய் சென்றிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வழக்கமான உடையில் இல்லாமல் மாடர்ன் உடையில் சென்றிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Background
Stalin Dubai Trip LIVE Updates:
அரசு முறை பயணமாக துபாய் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வழக்கமான உடையில் இல்லாமல் மாடர்ன் உடையில் சென்றிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துபாய்க்கு பயணம் மேற்கொண்டார். நான்கு நாள் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு செல்கிறார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்போது, முதலமைச்சரை பார்த்த திமுகவினர் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். முதலமைச்சரை வேஷ்டி, சட்டையில் பார்த்த அவர்களுக்கு, மாடர்ன் உடையில் வந்து ஆச்சர்யம் கொடுத்தார். பேண்ட், சட்டையின் ஜர்கின் போட்டுக்கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்னையில் இருந்து தனி விமான மூலம் துபாய் சென்றுள்ள முதலமைச்சர் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை இன்று திறந்து வைக்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -