உலக அழகி 2021 போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீசைனி இரண்டாவது இடத்தை பிடித்தார். அத்துடன் ப்யூட்டி ஆஃப் பர்போஸ் என்ற பட்டத்தையும் வென்றார். இந்நிலையில் அவர் கடந்த வந்த சில தடைகள் தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவாக செய்துள்ளார்.
அதன்படி, “நான் என்னுடைய சிறிய வயது முதல் உலக அழகி போட்டியில் பங்குபெற வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். என்னுடைய 6 வயது முதல் நான் உலக அழகி போட்டியில் பங்கேற்பது போல் நினைத்து கொண்டேன். எனக்கு அப்போது உலக அழகி என்றால் ஒரு சூப்பர் ஹீரோ போல் தோன்றியது. முகப்பிரச்னை மற்றும் இதயபிரச்னை ஆகியவற்றை நான் கடந்து வந்தது பலருக்கு ஒரு புத்துணர்வாக இருக்கும் என்று நம்புகிறேன். அதற்காக இந்த கதையை கூறுகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் கல்லூரி படித்து கொண்டிருக்கும் போது ஒரு மிகப்பெரிய கார் விபத்தில் சிக்கினேன். அப்போது என்னுடைய முகம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. என்னுடைய முகம் எனக்கே அடையாளம் தெரியாதது போல் இருந்தது. என் முகத்தில் அவ்வளவு காயங்கள் இருந்தன. இதனால் நான் அழுதால் கூட என்னுடைய கண்ணீர் முழுவதும் முகத்திலுள்ள காயங்கள் மீது பட்டு மிகப் பெரிய வலியை உண்டாக்கும்.
அந்த மிகப்பெரிய கார் விபத்திலிருந்து நான் உயிர் பிழைத்தை ஒரு நம்பிக்கையாக நான் கருதினேன். அதைவைத்து இந்த இகட்டான சூழலை நான் கடந்து வந்தேன் மீண்டும் என் கனவை நோக்கி பயணம் செய்தேன். நம்முடைய வாழ்வில் நாம் அனைவரும் பல விதமான சிக்கல்கள் மற்றும் பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அந்தச் சூழலில் நாம் எப்போதும் நம்பிக்கையை கைவிட கூடாது. அது நம்முடைய அனைத்து விதமான பிரச்னைகளுக்கான தீர்வுகளை கண்டறிய முக்கியமானதாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்தப் பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்