Boat Missing: தெற்கு செனகல் கடலோர நகரமான கஃபௌடைனில் இருந்து  ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற படகு நடுக்கடலில் மாயமானதாக  தகவல் வெளியாகி இருக்கிறது.


ஆபத்தான பயணம்


மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கேனரி (Canary Island) தீவுகளுக்கு புலம்பெயர்ந்தோர்கள் அடிக்கடி பயணம் செய்து வருகின்றனர். மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கேனிரி தீவுகளுக்கு பயணம் மேற்கொள்வது மிகவும் ஆபத்தான பாதைகளில் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக இந்த சக்திவாய்ந்த நீரோட்டங்களுக்கு இடையே பயணம் செய்யும்போது சாதாரணமாக மீன்பிடி படகுகளில் பயணம் செய்கின்றனர். இதனால் இவ்வழியில் பல விபத்துகள் நடைபெறுகின்றன.


சமீபத்தில் கூட, கிழக்கு லிபியாவில் இருந்து கிரீஸ் நோக்கி புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து கிரீஸின் தெற்கு பெலோபொனீஸ் பகுதிக்கு தென்மேற்கே சுமார் 76 கிலோ மீட்டர் தொலைவில் நடந்தது. இந்த விபத்தில் சுமார் 79 பேர் உயிரிழந்தாகவும், 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் கூறப்பட்டது.



300 பேரின் நிலை என்ன?


இந்நிலையில், தற்போது டெனெரிஃப்பில் இருந்து சுமார் 1,700 கிலோ மீட்டர் (1,057 மைல்) தொலைவில் தெற்கு செனகல் கடலோர நகரமான கஃபௌடைனில் இருந்து  மீன்பிடி படகு மூன்று  ஜூன் 27ஆம்  தேதி ஸ்பெயின் நாட்டின்  கேனரி தீவுக்கு சென்றது. அதில் மூன்று படகிலும் 65க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். கிட்டத்தட்ட புலம்பெயர்ந்து தொழிலாளர்கள் சுமார் 300 பேர் பயணம் செய்தனர். இதில் அதிகபட்சமாக குழந்தைகள் பயணித்ததாக கூறப்படுகிறது.


இவர்கள் அனைவரும் மொராக்கோ, மாலி, செனகல், ஜவரி கோஸ்ட் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இந்த படகு டெனெரிஃப்பில் இருந்து சென்றுக் கொண்டிருந்தபோது நடுக்கடலில் மாயமானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை அறிந்த ஸ்பெயின் நாட்டின் மீட்புக்குழுவினருடன் கடல்சார் மீட்பு விமானம் ஒன்றும் அவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


மேலும், இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தற்போதைய நிலவரப்படி நடுக்கடலில் மாயமான 3 படகில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும் அவரின் நிலை என்னாயிற்று என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க 


Pope Francis - New Cardinals: பல்வேறு நாடுகளை சேர்ந்த 21 பேர் புதிய கார்டினல்களாக நியமனம்.. போப் ஆண்டவர் அறிவிப்பு..