ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா கலிபா. இவர் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் அமெரிகக ராணுவத்தை விமர்சித்து வெளியிட்ட வீடியோவிற்கு கடும் கண்டனம் குவிந்து வருகிறது.
அமெரிக்க ராணுவத்தை விமர்சித்த மியா கலிபா:
அந்த வீடியோவில் மியா கலிபா கூறியிருப்பதாவது, “ வீட்டில் உள்ள அனைவருக்கும், தங்களது சொந்த மண்ணில் அல்லாதவர்களுக்கும், அவர்களைப் பற்றி கவலைப்படாதவர்களுக்காக போரை நடத்துபவர்களுக்கும் காலை வணக்கம்.
உங்கள் சிறிய மூளையை ஒரு நிகழ்வுக்கு பிந்தைய மனச்சிதைவு எனப்படும் ( PTSD) என்பதில் இருந்து துடைத்துவிட்டு இங்கு வந்து பாருங்கள். அமெரிக்கா உங்களைப் பற்றி எந்தளவு அக்கறை கொண்டுள்ளது என்று. உங்களுக்கு அல்லாத ஒரு போரில் சண்டையிட்டு வரும் உங்கள் மூளையை அவர்கள் என்ன செய்யச் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். ஒரு முறை நீங்கள் முடிந்துவிட்டால் அவர்களுக்கு உங்களைப் பற்றி கவலையில்லை.” இவ்வாறு மியா கலிபா அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
உக்கிரம் அடையும் போர்கள்:
மியா கலிபா அந்த வீடியோவில் அமெரிக்க ராணுவத்தை கேலி செய்யும் விதமாக பேசியுள்ளார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடும் பாலஸ்தீனியர்கள் சுதந்திர போராளிகளே என்று மியா கலிபா கூறியிருந்தார். உலகில் நடைபெறும் பெரும்பாலான போர்களின் பின்னணியில் அமெரிக்காவே இருந்து வருகிறது.
சமீபத்தில் உலகில் நடைபெற்று வரும் இரண்டு பெரிய போர்களான ரஷ்யா – உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்களின் பின்னணியிலும் அமெரிக்காவின் பங்கு உள்ளது. இந்த போர்களை பல நாடுகள் முடிவுக்கு கொண்டு வர விரும்பினாலும், அமெரிக்கா தங்களுக்கு சாதகமான நாடுகளுக்கு ஆதரவாக இந்த போரை முடிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு போர்களாலும் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மியா கலிபாவிற்கு குவியும் கண்டனம்:
மியா கலிபா இந்த சூழலில், அமெரிக்க ராணுவத்தை விமர்சித்து வெளியிட்ட வீடியோவிற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதையடுத்து, அவர் இந்த வீடியோவை நீக்கினார். ஆனாலும், இந்த வீடியோ பதிவிறக்கம் செய்யப்பட்டு மற்றவர்கள் மூலம் பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மியா கலிபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மியா கலிபா ஆபாச படங்களில் நடிக்கும்போது ஹிஜாப் அணிந்து கொண்டு நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.