கொடூரமான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் கர்ப்பிணியை வெட்டி, வயிற்றில் இருந்த கருவை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டும் இன்றி, கர்ப்பிணி வயிற்றை கிழித்த இருவர்கள் அந்த கருவை திருடி சென்றுள்ளனர். 20 வயதான ரோசா இசெலா காஸ்ட்ரோ வாஸ்குவேஸ், எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, அவர் இரண்டு நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
அவரது வயிற்றில் இருந்து கருவை வெட்டி எடுத்து மெக்சிகோவின் வெராக்ரூஸ் மாநிலத்தில் உள்ள மெடலின் டெல் பிராவோ என்ற இடத்தில் அவரது உடலை வீசினர்.
கொடூர சம்பவம் குறித்து வெராக்ரூஸ் மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சந்தேக நபரின் கையில் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று இருந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை அதிகாரி வெளியிட்டுள்ள திடுக் தகவலில், "பெண்ணை தாக்கிய அந்த நபரால் குழந்தையை பெற்று கொள்ள முடியவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட கருவில் இருந்து குழந்தையை எடுக்க அவர்கள் கர்ப்பிணியை வெட்டியுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபர்களான ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நீதிபதி முன் திங்கட்கிழமை அன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதுதொடர்பாக கர்ப்பிணியின் உறவினர் கூறுகையில், "பிறக்க போகும் குழந்தைக்கு உடைகள் தருவதாக கூறி சமூக ஊடகங்கள் மூலம் கர்ப்பிணியை அவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இதேபோன்று, சமீபத்திய காலத்தில் நடக்கும் மூன்றாவது கொலை சம்பவம் இதுவாகும்" என்றார்.
கர்ப்பிணியின் சகோதரி இதுகுறித்து கூறுகையில், "ரோசா இசேலா ஒரு பெண்ணைச் சந்திக்கச் சென்றிருந்தார். அவரது குழந்தைக்கு ஆடைகளை தருவதாக சமூக ஊடகங்களில் அவரை தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது" என்றார்.
இதற்கிடையே, சந்தேகத்திற்குரிய பெண்ணும் ரோசாவும் சந்தித்து கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், ரோசா இசெலாவும், விமான நிலையத்திற்கு அருகில் அவர் சந்தித்த மர்மப் பெண்ணும் சந்தித்து கொள்வது பதிவாகியுள்ளது. அந்தப் பெண் தாமதமாக வருவதும், பாதிக்கப்பட்ட கர்ப்பிணியிடம் பேசும்போது பதட்டத்துடன் சுற்றிப் பார்க்கிறார்.
ரோசா இசெலா பின்னர் ஒரு வாகனத்தில் ஏறியதாக கூறப்படுகிறது. பின்னர், அவரை யாரும் உயிருடன் பார்க்கவே இல்லை. அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கிய பின்னர் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின் டெக்சாஸில் ஒரு பெண் தனது கர்ப்பிணி தோழியைக் கொன்று, பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் இருந்த கருவைத் தனக்கானதாக மாற்ற முயன்றி செய்துள்ளார். இக்குற்றத்திற்காக டெய்லர் பார்க்கர் மரண தண்டனை பெற்றார்.
2021 ஆம் ஆண்டில் வன்முறையால் பாதிக்கப்பட்டு மெக்ஸிகோவில் 3,700 க்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டனர். அவர்களில், சுமார் 1,000 பெண் கொல்லப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன.