ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் ரீபிராண்ட் செய்யப்பட்டு, மெட்டா பிளாட்ஃபார்ம் என்று அண்மையில் மாற்றப்பட்டது.


இந்த மெட்டா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜேரன் ஆண்ட்ரூ மில்ஸ். 39 வயது நபரான இவர் தன்பாலின உறவாளர். இவர் மெட்டா நிறுவனத்தின் கம்யூனிட்டி டெவலப்மென்ட் மேலாளராக இருந்தார். இவர் போலீஸார் நடத்திய அண்டர்கவர் ஆபரேஷனில் சிக்கியுள்ளார்.


ஓஹியோ நகர போலீஸார் குழந்தைகளை பாலியல் வலையில் சிக்க வைக்கும் ஃபீடோஃபைல்களைக் கண்டறியும் ஒரு ஆபரேஷனை ரகசியமாக மேற்கொண்டது. இந்த ஆப்பரேஷன் முலம் தான் ஜேரன் ஆண்ட்ரூ மில்ஸ் சிக்கியுள்ளார். போலீஸார் மில்ஸிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


அதில் அவர், இணைய வழியாக 13 வயது சிறுவன் ஒருவருடன் நட்பாகி அவரை தன்னை சந்திக்க வருமாறு நேரம், தேதி குறித்தது அம்பலமாகியுள்ளது.






மில்ஸிடம் நடத்தப்பட்ட விசாரணையை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த விசாரணையின் போது மில்ஸ் தான் அந்த சிறுவனிடம் பேசியது உண்மை. ஆனால் அதில் எந்த உள் அர்த்தமும் இல்லை. நட்பாகவே பேசினேன். சிறுவனை சந்திக்க திட்டமிடவில்லை. நீங்கள் வேண்டுமானால் சோதனைகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கிறார்.
இந்த விசாரணை வீடியோ லீக் ஆனவுடன் மைல்ஸ் தனது லிங்க்ட் இன், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை நீக்கினார். மிஸ்ல் முன்னதாக கலிஃபோர்னியா  LGBTQ+ குழுவின் இயக்குநராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மில்ஸ் ஃபீடோஃபைல் விவகாரத்தில் சிக்கியதால் அவரை பணி நீக்கம் செய்துள்ளது மெட்டா நிறுவனம்.
இது குறித்து அந்த நிறுவனம் செய்தித் தொடர்பாளர், "மைல்ஸ் மெட்டா நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போன்ற குற்றத்தில் சமரசம் செய்வதற்கில்லை" என்று தெரிவித்துள்ளது.


உலகில் பல பிரபலங்கள் தன்பாலின உறவாளர்களாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். ஆப்பிள் சி.இ.ஓ. டிம் குக், தான் ஒரு கே அதாவது தன்பாலின உறவாளர் என்று ஒப்புக் கொண்டவர். இதுபோல் உலகளவில் பலரும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் குழந்தைகளை பாலியல் இச்சைக்கு ஆளாக்குவது கொடுங்குற்றமாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.