மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தனது கணவர் மற்றும் ராணியின் பேரன் இளவரசர் ஹாரியுடன் மேகன் மார்க்லே சமீபத்தில் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ராணியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்க ஒரு பெரிய கூட்டம் வின்ட்சர் கோட்டைக்கு வெளியே நின்றது. ஹாரியின் சகோதரர் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோரும் அவர்களுடன் சென்றனர்.






இந்த நிலையில், மேகன் மார்க்லே துக்கத்தில் இருந்த பெண்ணை கட்டிபிடித்து ஆறுதல் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அரண்மனைக்கு வெளியே கூடியிருந்த பொதுமக்களுடன் ஹாரி பேசும் காட்சியுடன் அந்த வீடியோவுடன் தொடங்குகிறது. இதற்கிடையில், கருப்பு உடையில் அந்த இடத்திற்கு வந்த மேகன் ஒரு இளம்பெண்ணை நோக்கி நடக்கிறார். அந்த பெண்ணை நெருங்கியதும் மேகன் அந்தப் பெண்ணின் பெயர் என்ன என்று கேட்கிறார். அதற்கு அவர் "அமெல்கா" என்று பதிலளித்தாள். மேகன் பெயரை அவரது பெயரை சொல்லி "இங்கே வந்ததற்கு உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கு நன்றி. நாங்கள் அதை பாராட்டுகிறோம்” என்று மேகன் தெரிவித்தார். 






அதற்கு நன்றி என்று அமெல்கா பதிலளித்தார். தொடர்ந்து மேகன் ”எவ்வளவு நேரம் நீங்கள் இங்கு காத்திருக்கின்றீர் என்ற கேள்விக்கு "இரண்டு மணிநேரம்” இருக்கும் என்று அமெல்கா பதிலளிக்கிறார். 






உடனடியாக மேகன், “ஓ, நல்லது. நீங்கள் விரைவில் வீடு திரும்ப முடியும் என்று நம்புகிறேன். நீங்கள் இங்கே இருப்பதை நான் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார். டக்கென்று அங்கே நின்ற அமெல்கா என்ற பெண், உங்களை ஒருமுறை கட்டிபிடிக்கலாமா என்று கேட்கிறார். மேகனும் உடனடியாக நிச்சயமாக என்று அந்த பெண்ணை கட்டி பிடிக்கிறார். 


இந்த வீடியோவை இசபெல் சார்ட்டர்ஸ் (@IzzyChar97) என்ற பெயரில் டிக்டோக் கணக்கிலிருந்து ஐடி மூலம் இந்த வீடியோ வெளியானது. இதை பலரும் தற்போது அதிவேகமாக தங்களது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் வைரல் செய்து வருகின்றனர்.