மிஸ் இங்கிலாந்து அழகிப்போட்டியின் 94 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஒரு போட்டியாளர் மேடையில் மேக்கப் இல்லாமல் சென்றுள்ளார். லண்டனைச் சேர்ந்த மெலிசா ரவூப், இந்த வார தொடக்கத்தில் நடந்த போட்டியின் அரையிறுதிச் சுற்றில் எந்தவித ஒப்பனையும் இல்லாமல் பங்கேற்றார். அக்டோபரில், மிஸ் இங்கிலாந்து போட்டியிலும் மேக்கப் இல்லாமல் அவர் போட்டியிட உள்ளார்.






தி இன்டிபென்டன்ட் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த 20 வயது ரவூப், இயற்கையான தோற்றத்தில் மேடையில் செல்வது பயமுறுத்துவதாக இருந்தது. ஆனால், உண்மையில் யார் என்பதை உலகுக்குக் காட்ட வேண்டும் என்ற விருப்பத்தால் தான் தூண்டப்பட்டதாகக் கூறினார்.


இதுகுறித்து கூறுகையில், "அழகுக்கான தரத்தை எட்டியதாக நான் ஒருபோதும் உணரவில்லை. என் சொந்த சருமத்தில் நான் அழகாக இருக்கிறேன் என்பதை சமீபத்தில் ஏற்றுக்கொண்டேன். அதனால்தான் மேக்கப் இல்லாமல் போட்டியிட முடிவு செய்தேன். நம்பத்தகாத அழகுத் தரங்களைப் பின்பற்றுவது மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நன்கு அறிந்திருக்கிறேன். பெண்களை தன்னம்பிக்கையுடன் உணர விரும்புகிறேன்" என்றார்.


நான் அனைத்து அழகு தர நிலைகளையும் அகற்ற விரும்புகிறேன். எல்லா பெண்களும் தங்கள் சொந்த வழியில் அழகாக இருப்பதாக நான் உணர்கிறேன். எல்லாப் பெண்களுக்கும் அதைச் செய்ததாக உணர்கிறேன்" என்றார்.


ரவூப்பின் இந்த நடவடிக்கை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அனைத்து தரப்பு பெண்களிடமிருந்தும் அவர் ஆதரவைப் பெற்றுள்ளார். மிஸ் இங்கிலாந்து போட்டியில் ஒரு நேர்காணல் சுற்றும் அடங்கும், இது ஒரு போட்டியாளர் உண்மையில் யார் என்பதைப் பார்க்க உதவுகிறது என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.


"பெரும்பாலான போட்டியாளர்கள் நிறைய மேக்கப் அணிந்து மிகவும் எடிட் செய்யப்பட்ட படங்களைச் சமர்ப்பித்ததால் நாங்கள் 2019 இல் பேர் ஃபேஸ் டாப் மாடல் ரவுண்டை அறிமுகப்படுத்தினோம். மேலும் ஒப்பனைக்குப் பின்னால் இருக்கும் உண்மையான நபரை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்" என மிஸ் இங்கிலாந்து போட்டியின் இயக்குனர் ஆங்கி பீஸ்லி சிஎன்என் நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.


ரவூப் குறித்து பேசிய பீஸ்லி, அவர் மிகவும் தைரியமானது என்று கூறினார். "மிஸ் இங்கிலாந்து போட்டியில் அவருக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எல்லோரும் மேக்கப்பை அணிந்திருக்கும் போது இது மிகவும் தைரியமான விஷயம். ஆனால் அவர் இளம் பெண்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை அனுப்புகிறார்" என்று மேலும் கூறினார்.