வேற்றுகிரகங்களில் பிற உயிரினங்கள் இருக்கிறதா என்பது தொடர் மர்மமாகவே இருந்து வருகிறது. இது தொடர்பாக, தொடர் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இச்சூழலில், அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


புளோரிடாவில் வியப்பை ஏற்படுத்திய நபர்:


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சாலையில் ஒருவர் ஆடை இன்றி நடந்து சென்றுள்ளார். அவரை பிடித்து விசாரித்ததற்கு, தான் வேற்று பூமியில் இருந்து வந்துள்ளதாக சொல்லி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.


இதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, சிபிஎஸ்12 வெளியிட்டுள்ள செய்தியில், மார்ச் 8ஆம், புளோரிடாவின் பாம் பீச்சில் நிர்வாணமாக தெருவில் நடந்து சென்ற 44 வயது நபர் கைது செய்யப்பட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் (உள்ளூர் நேரம்) அந்த நபர் ஆடையின்றி நடந்து செல்வதைக் கண்ட உள்ளூர்வாசி ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.


காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி:


போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது, ​​அவர் தனது ஆடைகளை எங்கே விட்டுச் சென்றார் என்று தெரியவில்லை என்றும், எங்கிருந்து வந்துள்ளார் என்பதை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார். 


தன்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை என்று கூறியுள்ளார். அவர் பாம் பீச் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அவருடைய பெயர் ஜேசன் ஸ்மித் என்பது தெரிய வந்தது. தான் வேற்று பூமியில் இருந்து வந்ததாக அவர் கூறியதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.


இருப்பினும், பின்னர் விசாரணையில், ஸ்மித் புளோரிடாவில் உள்ள வெஸ்ட் பால்ம் கடற்கரையில் வசிப்பதாக கூறினார். அநாகரீகமான வெளிப்பாடு, ஒழுங்கீனமான நடத்தை, கடமையை செய்ய விடாமல் அதிகாரியைத் தடுத்தது உள்ளிட்ட மூன்று கிரிமினல் குற்றங்களின் கீழ் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். 


கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவத்தில், புளோரிடாவில் பார்ட்டிக்கு சென்றுவிட்டு வேறு ஒருவரின் வீட்டின் கதவை உடைத்து அங்கு குளித்து கொண்டிருந்த நபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, என்பிசி மியாமி செய்து வெளியிட்டுள்ளது.


கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த சம்பவம் நடந்துள்ளது. குளியல் தொட்டியில் அவர் நிர்வாணமாக குளித்து கொண்டிருந்தார். கைது செய்யப்பட்ட பிறகு, அவரின் பெயர் Levi Sholing என தெரிய வந்தது. தான் தங்கியிருந்த விடுதி என்று நினைத்து அங்கு குளித்ததாக அவர் காவல்துறையிடம் விளக்கம் அளித்தார்.


இதையும் படிக்க: JEE Mains 2023 Session 2: ஜேஇஇ மெயின் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி? முழு விவரம்