இலங்கையில் வரலாறு காணாத போராட்டம் காரணமாக கோட்டபய ராஜபக்ச கடந்த வாரம் அதிபர் பதவியிலிருந்து விலகிய நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.


இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சவின் முன்னாள் ஆதரவாளரான டலஸ் அழகபெரும, இடதுசாரியான அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் அதிபர் தேர்வுக்கான போட்டிக்கு உள்ளனர்.


இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில், முன்னாள் அதிபரான மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். 


 






கடந்த சில மாதங்களாக நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து கோட்டபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. இதையடுத்து மே மாதம் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவி விலக நேர்ந்தது. மக்கள் போராட்டம் இலங்கையில் மிகத் தீவிரமடைந்ததால் சிங்கப்பூா் தப்பிச் சென்ற கோட்டபய ராஜபட்ச, அதிபா் பதவியை ஜூலை 14ஆம் தேதி ராஜினாமா செய்தாா். இதையடுத்து முதல்முறையாக ராஜபக்ச குடும்பம் மக்கள் முன் தோன்றி உள்ளது. ராஜபக்சவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் இடைக்கால அதிபர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், டலஸ் அழகபெருமவக்கு அக்கட்சியின் தலைவர் பீரிஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.


ராஜபக்சவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட எம்பிக்கள் உள்ளனர். ஆனால், அவர்களில் பலர் தற்போது கட்சி சார்பற்று செயல்பட்டு வருகின்றனர். கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் தேர்தல் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சஜித் தனது ஆதரவினை டலஸ் அழகபெருமவுக்கு தெரிவித்திருப்பது அதிபர் தேர்தலில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. மூன்று வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் துலாஸ் அலகபெருமவுக்கும் ரணிலுக்கும்தான் போட்டி என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண