இங்கிலாந்தின் லண்டனில் இருந்து திருடப்பட்ட பென்ட்லி முல்சேன் என்ற சொகுசு கார் பாகிஸ்தானின் கராச்சியில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் மீட்கப்பட்டது. இங்கிலாந்து புலனாய்வு அமைப்பு வழங்கிய தகவலின் அடிப்படையில் சுங்க அமலாக்கத்தின் (சிசிஇ) ஆட்சியரகம் மூலம் சோதனை நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


கராச்சியில் உள்ள டி.ஹெச்.ஏ.ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாம்பல் நிற பென்ட்லி முல்சேன் - V8 ஆட்டோமேட்டிக், வண்டி எண் SCBBA63Y7FC001375, இன்ஜின் எண் CKB304693 - பற்றி கராச்சியில் உள்ள சுங்க அமலாக்கத்துக்கு பிரிட்டிஷ் உளவுத்துறை தகவல் வழங்கியதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தித்தாளான பிசினஸ் ரெக்கார்டர் தெரிவித்துள்ளது. தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்க்க அந்த இடத்தில் கடுமையான கண்காணிப்பைத் தொடர்ந்து நேரடித் தேடல் நடத்தப்பட்டது என செய்தி அறிக்கை மேலும் கூறுகிறது. சோதனையில் உயர்ரக கார் ஒரு வீட்டின் வராந்தாவில் நிறுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.







குறிப்பிட்ட வாகனத்தின் உரிமையாளரை தற்போது கஸ்டடியில் எடுக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






விசாரணையின் போது, ​​சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஒப்புக்கொண்ட மற்றொரு நபரால் கார் தனக்கு விற்கப்பட்டதாக உரிமையாளர் கூறியதாக கூறப்படுகிறது.


ஒரு பயனரால் ட்வீட் செய்யப்பட்ட வீடியோவில், ஒரு அழகான, சாம்பல் நிற பென்ட்லி ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் நிறுத்தப்பட்டிருப்பது காட்டப்படுகிறது. மேலும் ஒருசிலர் முயன்று காரை நகர்த்த முற்படுவதும் காட்டப்படுகிறது.