பொதுவாக நூலகத்தில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வரும்போது நம்மில் பலருக்கும் அதை உரிய நேரத்தில் படித்து முடித்து திருப்பிக் கொடுப்பதே கடினமான செயலாகவும், சவாலான விஷயமாகவும் இருக்கும்.


இப்புத்தகங்களை நம்மில் பலரும் உரிய நேரத்தில் திருப்பி தராமல், அபராதத் தொகையுடன் திருப்பி அளிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருப்போம்.


கனடா நூலகத்தின் இன்ஸ்டா பதிவு


அந்த வகையில் இங்கு ஒருவர் சுமார் அரை நூற்றாண்டு காலம் கழித்து தான் எடுத்து வந்த புத்தகத்தை மீண்டும் நூலகத்துக்கு நல்ல முறையில் ஒருவர் திருப்பி அனுப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கனடாவின் வான்கவெர் நகரைச் சேர்ந்த பொது நூலகத்தில் இந்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


இது குறித்து தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வான்கவெர் நூலகம், கொஞ்சம் தாமதமாகவும் (51 ஆண்டுகள்!) இந்த இனிய குறிப்புடனும் எங்கள் நூலகத்தைச் சேர்ந்த இந்தப் புத்தகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.


’சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு...'


அபராதத் தொகையை சமீபத்தில் தான் நாங்கள் அகற்றியுள்ள நிலையில், இந்தப் புத்தகத்தை திருப்பி அனுப்பியவருக்கு ஒரு ரூபாய் கூட அபராதம் இல்லை” எனப் பகிரப்பட்டுள்ளது.


 






1971ஆம் ஆண்டு, ஏப்ரல் 20ஆம் தேதியே வந்துசேர வேண்டிய ’த டெலஸ்கோப்’ எனும் இந்தப் புத்தகம், தற்போது, “கொஞ்சம் தாமதாகிவிட்டது மன்னியுங்கள், 51 ஆண்டுகள் ஆனாலும் இந்தப் புத்தகம் நல்லபடியாக உள்ளது. நன்றி” எனும் குறிப்புடன் பெயர் கூற விரும்பாத நபரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.