கொரியப் பாடகரான சோய் சுங்- பாங் கடிதம் ஒன்றை எழுதிவைத்து தனது யூட்யூப் சேனலில் பதிவிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.


கொரியா’ஸ் காட் டேலண்ட் என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்று  உலகம் முழுவது புகழ்பெற்றவர் சோய் சுங் பாங். இந்த நிகழ்ச்சியில் தனது குழந்தை பருவத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட சோய் தனது மூன்று வயதில் ஒரு அநாதை ஆசிரமத்தில்தான் கைவிடப்பட்டதாகவும்  தனது பிழைப்பிற்காக பபிள்கம் விற்று வந்ததாகவும் தெரிவித்தார். இவரது இந்தக் கதை அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது. மேலும் இவர் பாடிய பாடல்கள்  நடுவர்களின் பாராட்டுக்களைப் பெற்றது மட்டுமில்லாமல் யூட்யூபில் 21 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது. புகழ்பெற்ற பாடகரான ஜச்டின் பீபர் இவரது பாடல்களைக் கேட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.


புற்றுநோய் இருப்பதாகக் கூறி பண மோசடி


சொந்தமாக யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார் சோய் சுங் - பாங். சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு வெவ்வேறு வகையான புற்று நோய்கள் இருப்பதாக பொய்சொல்லி தனது சிகிச்சைக்காக பணம் தேவைப்படுவதாக தனது ரசிகர்களிடம் பணம் கேட்டு வந்த சர்ச்சையில் பிடிபட்டார் சோய்.


மன்னிப்புக் கடிதம்


33 வயதான் சோய் நேற்று சியோலில் தனது அறையில் தற்கொலை செய்துகொண்டார். இத்துடன் தனது யூட்யூப் சேனலில் கடிதன் ஒன்றையும் எழுதிவைத்துள்ளார் ச்சோய்.


இந்தக் கடிதத்தில் ”என்னுடைய முட்டாள்தனத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பணம் பெற்ற அனைவருக்கும் திருப்பி அந்தப் பணத்தை செலுத்திவிட்டுள்ளேன். இன்று திரும்பிப் பார்க்கையில்  கடந்த 10 ஆண்டுகளாக எல்லாரையும்போல்  சகஜமாக வாழவே நானும் ஆசைப்பட்டிருக்கிறேன் இறுதியில்  உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன், என்று தனது கடிதத்தை முடித்துள்ளார் சோய். அவரது இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


தற்கொலை தீர்வல்ல:


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)