நாசாவிலிருந்து அனுப்பப்படும் செயற்கைக்கோள் புகைப்படங்களில் இருக்கும் சுவாரசியத்துக்குச் சற்றும் சளைத்ததல்ல கூகுள் மேப் வழியாக பூமியிலிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள். இந்த வரிசையில் அண்மையில் கூகுள் மேப் வழியாக பார்த்ததில் 50 அடி நீளப் பாம்பு தென்பட்டதாக டிக்டாக் வீடியோ ஒன்று வெளியானது. 






வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் டைட்டன் போ எனப்படும் நீண்ட பாம்பாக இது இருக்கலாம் எனப் பல கருத்துக் கூறினார்கள். டிக்டாக்கில் கூகுள் மேப்ஸ் ஃபன் என்கிற பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது. அந்த பக்கத்தில் இதுபோன்ற சுவாரசியமான சில வீடியோக்கள் தொடர்ச்சியாகப் பகிரப்படும். இந்த ஒரு பாம்பு வீடியோவுக்கு மட்டும் 2 மில்லியன் பார்வையாளர்கள் குவிந்தனர். ஆனால் அந்த வீடியோ குறித்த உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானிகள் ’தி செர்பண்ட் இன் தி ஓஷன்’ எனப்படும் உலோகச் சிற்பம் எனக் கண்டறிந்து. பிரான்ஸ் பகுதியில் இந்த சிற்பம் காணப்படுகிறது. 






மூன்று கால் மனிதன், இரட்டைத் தலை பாம்பு, பெர்முடா முக்கோணம் ஆகியவற்றின் வரிசையில் மனிதர்களின் சுவாரசியத்துக்கு தீனிபோடும் விதமாக இந்த வீடியோ அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.