ரஷ்யா தனது புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளான (Hypersonic missiles)  கின்சலை (Kinzhal)  உக்ரைன்  போரில்  முதன்முறையாக கடந்த வெள்ளிக்கிழமை பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.  உக்ரைனில் நாட்டின் மேற்கில் உள்ள ஆயுதங்கள் சேமிப்பு கிடங்கை அழிக்க கின்சல் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது.


இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "ஹைப்பர்சோனிக் ஏரோ பாலிஸ்டிக் ஏவுகணைகள் கொண்ட கின்சல் ஏவியேஷன் ஏவுகணை அமைப்பு, இவானோ-பிரான்கிவ்ஸ்க் பகுதியில் உள்ள டெலியாட்டின் கிராமத்தில் ஏவுகணைகள் மற்றும் விமான வெடிமருந்துகள் அடங்கிய பெரிய கிடங்கை அழித்தது" என்று தெரிவித்துள்ளது.


கிஞ்சல் ஏவுகணை  ஏன் ஆபத்தானவை?



  1. கின்சல் என்பது 1,500 முதல் 2,000 வரை கிமீ வரை வான்வழியில் ஏவப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையாகும். இது 480 கிலோ எடையுள்ள அணுசக்தியை சுமந்து செல்லக்கூடியது.  இது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட ஃபேட் மேன் வெடிகுண்டின் சக்தியை விட 33 மடங்கு அதிகம் என்று அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுகின்றன.

  2. ரஷ்ய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு அதிபர் புதின் வெளியிட்ட புதிய ஆயுதங்களின் வரிசையில் கின்சல் ஏவுகணையும் ஒன்றாகும். இது ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்கக்கூடிய கின்சல் (டாகர்) ஏவுகணை ஆகும்.

  3. இந்த ஏவுகணை ஏவப்பட்ட பிறகு, மணிக்கு 4,900 கி.மீ வேகத்தில் செல்கிறது. மேலும், இது மணிக்கு 12,350 கி.மீ வேகத்தை எட்டும் அளவிற்கு திறன் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றன.

  4. கிஞ்சல் ஏவுகணை மிகவும் ஆழமான பகுதிகளிலும் தாக்கும் அளவுக்கு திறன் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


மேலும், இது குறித்து விளாதிமிடிர் புதின் கூறுகையில், ‘ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்கும் மற்றும் வான்-பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்கக்கூடிய கின்சாலை ஒரு சிறந்த ஆயுதம் இது’என்று  குறிப்பிட்டுள்ளார்.



  1. இதன் சிறப்பு என்னவென்றால், அதிவேகத்தில் அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்குதல் நடத்தும், ஏவுகணை தடுப்பு அமைப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளும், எந்த அமைப்புகளாலும் தடுக்கவோ, ட்ராக் செய்யவோ முடியாது.


 


ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளான (Hypersonic missiles) :


ஹைபர்சோனிக் ஏவுகணைகள் கண்டங்களுக்கு இடையே பாய்ந்து தாக்கும் அதிவேக ஏவுகணையான பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் க்ரூஸ் ஏவுகணையின் திறன்கள் இணைந்திருப்பது இதன் சிறப்பம்சம்.


இது பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை, பூமியின் பரவளைய பாதையில் சென்று மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்கு திரும்பி வருகிறது.


3000 முதல் 7000 கிலோமீட்டர் தொலைவுவரை பயணிக்கக்கூடிய இந்த ஏவுகணை ஹைபர்சோனிக் எச்.ஜி.வி  (hypersonic glide vehicle (HGV)) என்றும் அழைக்கப்படுகிறது.


ஹைபர்சோனிக் HGV சாதாரண ஏவுகணைகள் போல் அல்லாமல், வளிமண்டலத்தில் தாழ்வான நிலையிலே செல்லக்கூடியது. இதனால்தான் அதன் தாக்கும் திறன் அதிகரித்து, எதிர்ப்பு ஏவுகணைகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்குகிறது.


இதில் இரண்டு வகைகள் இருக்கிறது. க்ளைட் வெகிக்கிள் (glide vehicles )  மற்றும் ( cruise missiles.) க்ரூஸ் ஏவுகணைகள் ஆகும்.









உலக சிட்டுக்குருவிகள் தினம்...! - சிட்டுக்குருவிகள் சொல்லவரும் சேதி தெரியுமா உங்களுக்கு...!