மர்லின் மன்றோவின் ஆடையை  அணிவதற்காக 3 வாரங்களில் 7 கிலோ எடையை குறைத்தார் ஹாலிவுட் நடிகை  கிம் கர்தாஷியன்


அமெரிக்காவில் நடைபெற்று வரும் மெட் காலா 2022 நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகையும் தொழிலதிபருமான  கிம் கர்தாஷியன் பங்கேற்றார் .இந்நிகழ்ச்சியில் எலான் மஸ்க் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது சிவப்பு கம்பளத்தில் மார்லின் மன்றோவின் உடையை அணிந்து , கிம் கர்தாஷியன் நடந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.




மெட் காலா 2022-நிகழ்ச்சியில் மர்லின் மன்றோவின் ஆடையை அணிந்திருந்த கிம் கர்தாஷியன், மேலும் அந்த ஆடையை அணிய, எப்படி எடையை குறைத்தேன் என்பது குறித்து கூறியுள்ளார். இதற்கு முன்பு 1962 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடிக்கு பிறந்தநாள் பாடலை பாடுவதற்காக மர்லின் மன்றோ அணிந்திருந்த புகழ்பெற்ற பெடாஸ்லெட் ஆடையை அணிந்திருந்த கிம் கர்தாஷியன், மெட் காலா நிகழச்சியில்  அழகாகத் தோன்றினார்.


அந்த ஆடை சிறியதாக இருந்ததால், அதை அணிய எவ்வாறு சிரமப்பட்டதாகவும், அதில் பொருந்துவதற்கு எந்த மாதிரியான  முயற்சிகளை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். மெட் காலா  நிகழ்ச்சியில் தொகுப்பாளர் லா லா அந்தோணியிடம் ஆடையை அணிவதற்கு, எடையை குறைப்பதற்காக  அவர் மேற்கொண்ட முறைகளை கூறினார். அப்போது மன்றோவின் உடையை அணிவது எளிதான பயணம் அல்ல என்றும் ஆடையில் பொருந்துவதற்காக மூன்று வாரங்களில் 7 கிலோவை எடையை குறைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.


முதலில் ஆடை அணியும் போது, அது எனக்கு பொருந்தாமல் இருந்தது. எனவே அது எனக்கு பொருந்தாததால் நான் அழ விரும்பினேன், ஏனென்றால் அதை மாற்ற முடியாது. மேலும் ஆடையில் பொருந்துவதற்காக தனது உணவுப் பழக்கத்தை மாற்றினேன். ஆனால் பட்டினி கிடைக்கவில்லை, ஆனால் தனது உணவில் கண்டிப்புடன் இருந்தேன், மேலும் டிரெட்மில்லில் ஓடி பயிற்சி மேற்கொண்டேன், காய்கறிகள் சார்ந்த உணவுகளை  சாப்பிட்டேன்.மிகுந்த உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் காரணமாக உடல் எடையை  குறைத்தேன். உடல் எடை குறைத்து ஆடை சரியாக பொருந்திய போது, மகிழ்ச்சியில் அழுதுவிட்டேன்.இந்நிலையில் மூண்று வாரங்களில் நிகழ்ச்சியில் மர்லின் மன்றோவின் ஆடையை அணிவதற்காக மூன்று வாரங்களில் 7 கிலோ குறைத்தது, நிகழச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண