வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் மகள் ஜோ ஏ சமீபத்தில் ராணுவ பயிற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ராணுவ டாங்கியை அவர் இயக்கிய நிலையில் அதில் கிம் ஜோங் உன் பயணம் செய்துள்ளார்.
வடகொரியாவின் பெயரைக் கேட்டாலே பிற நாடுகள் மட்டுமல்ல அங்கு வாழும் மக்கள் கூட கடுமையான அச்சம் கொள்ளும் அளவுக்கு சட்ட திட்டங்களாலும், அதிகாரத்தாலும் அந்நாட்டை கட்டுகோப்பாக கிம் ஜோங் உன் ஆட்சி செய்து வருகிறார். அது ஒரு சர்வாதிகார நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அங்கு தவறு செய்தால் பாரபட்சம் பார்க்காமல் தண்டனை அளிக்கப்படும். பிறநாடுகள் பொருளாதார தடை விதித்தாலும் அதைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தான் கிம் ஜோங் உன் செயல்படுவார்.
சமீபத்தில் தான் வடகொரியாவில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. பெயரளவுக்கு மட்டுமே இந்த தேர்தல் நடத்தப்படும் நிலையில் இம்முறையும் கிம் ஜோங் உன் தான் அதிபராக வெற்றி பெற்றார். கிட்டதட்ட 99.93 சதவிகித வாக்குகளை அவர் பெற்றார். 0.7% வாக்குகள் கிடைக்காதது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் அந்த மீதமுள்ள வாக்காளர்கள் வெளிநாடுகளிலும், வடகொரியா கடற்படையிலும் இருப்பதால் பங்களிக்கவில்லை என சொல்லப்பட்டது. 0.3 சதவிகித மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த ஆச்சரியமளிக்கும் விதமாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் இளம் வயது மகள் ஜூ ஏ சமீப மாதங்களாகத் தன் தந்தையுடன் பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொண்டு வருகிறார். இந்த நிலையில் தனது தந்தை பின்னால் அமர்ந்திருக்க ராணுவ டாங்கி ஒன்றை ஓட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. ஜூ ஏ ஓட்டுநர் பகுதியில் அமர்ந்து வாகனத்தை இயக்கி கொண்டிருந்த தந்தை கிம் ஜோங் உன் அவருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
சீருடை அணிந்த மூன்று இராணுவ அதிகாரிகள் அவரின் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருக்கின்றனர். வட கொரியா ஜூ ஏ நிலையைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. எனினும் அவரின் கடந்த 2 ஆண்டுகால தொடர்ச்சியான செயல்பாடுகள் கிம் ஜோங் உன்னிற்கு பிறகு அவர் தான் வாரிசாக செயல்படுவார் என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
வட கொரியா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவை ஒட்டிய பகுதிகள் உட்பட தனது அண்டை நாடுகளுக்கு அருகிலுள்ள கடல் கடற்பரப்பில் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தியுள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மகள் ஜூ ஏ ராணுவ பயிற்சி, ராணுவ வீரர்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் கிம் ஜோங் உன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
