கட்டிப்பிடிக்க அனுமதியில்லை:


பள்ளி வளாகத்தில் கட்டிப்பிடிப்பதும் கைகளைப் பிடிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற பள்ளியின் அறிவிப்பினால், பெற்றோர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் ஒருவருக்கொருவர் உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்துவதைத் தடுக்கும் பள்ளி நிர்வாகத்தின் இந்த "கடுமையான" உத்தரவுகளை பெற்றோர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 


EssexLive எனும் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, இங்கிலாந்தின் லண்டனினில் இருந்து வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, செல்ம்ஸ்ஃபோர்டு பகுதியில் உள்ள Hylands எனும் பள்ளி, மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அன்பை பரிமாறிக்கொள்ளும் செயல்களான, கட்டிப்பிடிப்பது, கைகளை கோர்த்துக் கொள்வதை "அனுமதிப்பதில்லை" என்றும், மாணவர்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தி பிடிபட்டால், கையகப்படுத்தப்பட்ட மொபைல் போன்கள்  நாள் முழுவதும்  பாதுகாப்பாக பூட்டி வைக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கூறியுள்ளனர்.


உடல்ரீதியான தொடர்புக்கு தடை:


இந்த கடுமையான "hands off" கொள்கை உள்ளூர் மற்றும் பெற்றோர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், பெரும்பாலான பெற்றோர்களும் மாணவர்களும் இதை ஆதரிப்பதாகவும், இது "பரஸ்பர மரியாதையை ஏற்படுத்துகிறது மற்றும் எதிர்காலங்களில் மாணவர்கள் தாங்கள் அலுவலக வளாகங்களில் நடந்து கொள்ளும் முறையினை தற்போது இருந்தே  நடத்துவதை ஊக்குவிக்கிறது மேலும் பள்ளி நிர்வாகமும் இதனை எதிர்பார்க்கிறது" என்று பள்ளியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் மிஸ் கேத்தரின் மெக்மில்லன் அனுப்பிய கடிதத்தின்படி , மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் பள்ளி சமூகத்தின் உறுப்பினர்களிடையே "எந்தவித உடல்ரீதியான தொடர்பையும்" அனுமதிக்காது என குறிப்பிட்டுள்ளார். மேலும்,"கட்டிப்பிடிப்பது, கைகளைப் பிடிப்பது, ஒருவரை அடித்துக் கொள்வது போன்ற எந்தவொரு ஆக்ரோஷமான உடல் ரீதியான தொடர்பும் அனுமதிக்கப்படாது" என்று பள்ளி அந்தக் கடிதத்தில் கூறியுள்ளது. உடல் ரீதியான அனைத்து தொடர்புகளும் தடைசெய்யப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.


பெற்றோர்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்ட கடிதத்தில், "உங்கள் குழந்தையைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருட்டு இது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அனுமதிக்க முடியாது:


மேலும் அந்த கடிதத்தில் "உங்கள் குழந்தை வேறொருவரைத் தொட்டால், அவர்கள் சம்மதித்தாலும் இல்லாவிட்டாலும், எதுவும் நடக்கலாம். அது காயத்திற்கு வழிவகுக்கலாம், ஒருவர் இதனால் மிகவும் அசௌகரியமாக உணரலாம் அல்லது யாரையாவது தகாத முறையில் தொடலாம்." எனவும், "உங்கள் குழந்தைகளுக்கு உண்மையான நேர்மறையான நட்பை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், வாழ்நாள் முழுவதும், நாங்கள் ஹைலண்ட்ஸில் காதல் உறவுகளை அனுமதிக்க மாட்டோம்" எனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.


அத்துடன், "நிச்சயமாக, உங்கள் குழந்தை உங்கள் அனுமதியுடன் பள்ளிக்கு வெளியே இந்த உறவுகளை வைத்திருக்க முடியும்" எனவும்,"பள்ளியில் படிக்கும் போது உங்கள் பிள்ளை அவர்களின் கற்றலில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், மேலும் அவர்கள் உறவுச் சிக்கல்களால் திசைதிருப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை"  எனவும், "உங்கள் குழந்தையின் தனிப்பட்ட வளர்ச்சிப் பாடங்களில், நேர்மறையான, ஆரோக்கியமான உறவுகளைப் பற்றி நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம், மேலும் உங்கள் குழந்தை  பள்ளியில் நம்பகமான பெரியவர்களிடம் ஆலோசனை மற்றும் ஆதரவைப் பெறலாம்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 






பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையினை எலன் மஸ்க், “ டெமாலேஷன் படத்தில் வந்தெல்லாம் நிஜத்திலும் நடக்கிறது” என கிண்டலாக கூறியுள்ளார்.