Joe Biden: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை முத்தமிட சென்றது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


வேறொரு பெண்ணை முத்தமிட சென்ற அதிபர் பைடன்:


புதியதாக வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவி ஜில் என நினைத்து, வேறு ஒரு பெண்ணை முத்தமிட முயல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நீல நிற உடை அணிந்திருந்த ஒரு பெண்ண பைடன் முத்தமிட முயன்றபோது, தக்க நேரத்தில் அவரது மனைவி அங்கே வந்து பைடனை அழைத்துச் சென்றுள்ளார். அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது போன்ற எந்த தகவலும் அதில் இடம்பெறவில்லை. இருப்பினும், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அமெரிக்க அதிபரின் மனநலம் குறித்து பல்வேறு தரப்பினரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.






வலுக்கும் எதிர்ப்புகள்:


81 வயதான ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக நியாபக மறதி, பேசுவதில் தடுமாற்றம் போன்ற பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார். அண்மையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பும் உறுத் செய்யப்பட்டுள்ளது. இதனால், அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியிட்டால் அவர் சார்ந்த ஜனநாயக கட்சியின் வெற்றி வாய்ப்பு குறைவே என உட்கட்சியினரே பலரும் தெரிவித்து வருகின்றனர். இதனால், பல மூத்த தலைவர்களும் ஜோ பைடனை தேர்தலில் இருந்து விலகும்படி வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் தான் தனது மனைவி என நினைத்து வேறொரு பெண்ணை பைடன் முத்தமிட சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.


பைடன் - டிரம்ப் நேரடி போட்டி:


அமெரிக்க அதிபர் தேர்தலில் வரும் நவம்பர் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபரான ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பும் பிரதான வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். ஆரம்பத்தில் இருதரப்பினருக்கும் இடையே தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என கருதப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து இரண்டு வேட்பாளர்கள் இடையே நடைபெற்ற விவாதங்கள் மற்றும் டிரம்பின் மீதான துப்பாக்கிச் சூடு ஆகியவற்றால் தேர்தல் களம் அவருக்கு ஆதரவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதிபர் வேட்பாளராகும் கமலா ஹாரிஸ்?


இந்நிலையில், உட்கட்சி அழுத்தங்களை தொடர்ந்து பைடன் தேர்தலில் இருந்து விலகினால், தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் (59) ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஒருவேளை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்க வரலாற்றில் அதிபராகும் முதல் பெண் என்ற வரலாற்று சிறப்பை கமலா ஹாரிஸ் பெறுவார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது நினைவுகூறத்தக்கது.